பாதி சாதம்

நல்ல பசி. ஹோட்டலுக்கு சென்றேன். "சூடாக என்ன இருக்கிறது" என்று கேட்டேன். " காப்பி டீ மத்தபடி வெளியே வெயில்" என்றான். "அது சரி, சாப்பிட சூடாக என்ன இருக்கிறது? " என்று கொஞ்சம் அழுத்தமாக கேட்டேன். " " "இப்போது இது மட்டுமே" என்றான். விருட்டென்று புறப்பட்டு பக்கத்தில் இருந்து ஹோட்டலுக்குள் சென்றேன். ஏம்பா, சாப்பாடு சூடாக இருக்கிறதா என்று கேட்டேன். "ஓஓஓ இருக்கிறது, ஆனால் பாதி சாப்பாடு தான்" என்றான். நான் ஆச்சரியத்துடன் கேட்டேன் " அது "என்னப்பா பாதி சாப்பாடு " என்றேன். " "அதாவது சாதம் பாதி வெந்தது இருக்கிறது. பாதி வேகாததது இருக்கிறது. வெந்த சாதம் ஆறி இருக்கிறது. வேகாத சாதம் சூடாக இருக்கிறது. "

எழுதியவர் : ராம சுப்பிரமணியன் (1-Dec-21, 5:00 pm)
சேர்த்தது : Ramasubramanian
Tanglish : paathi saadam
பார்வை : 47

மேலே