ஏழையின் கேள்வி
தலை அடிபட்டு உயிர் போகாமல் இருக்க
தலைக்கவசம் அணிகின்றோம்
கார் ஓட்டும்போது விபத்தில் தன்னை காக்க
சீட் பெல்ட் அணிகின்றோம்
மழையில் நனைந்து உடல் பாதிக்காமல் இருக்க
ரெயின் கோட் அணிகின்றோம்
கொரோனா வராமல் இருக்க அனைவரும்
முகக்கவசம் அணிகின்றோம்
அதுபோல பசி வராமல் இருக்க
வயிற்றுக்கு ஏதாவது கவசம் உள்ளதா?