மனித ஆசைகள்

மனிதன் வாழ்வதும் ஆசையால் தான்.
மனிதன் அழிவதும் ஆசையால் தான்.
தாராளமாக இருப்பவனுக்கு பசி இல்லை என்று கவலை.
இல்லாத ஏழைக்கு ஏன் பசிக்கிறது என்று கவலை.
நிற்பவனுக்கு உட்கார ஆசை
உட்கார்ந்திரு பவனுக்கு பறக்க ஆசை
விதைக்கு மரமாக ஆசை
மரத்துக்கு விதையாக ஆசை
பத்து ரூபாய் இருக்கும் பொழுது நூறு ரூபாய்க்கு ஆசை
நூறு ரூபாய் இருக்கும் பொழுது ஆயிரம் ரூபாய்க்கு ஆசை
இப்படி மனிதனின் ஆசைகள் வளர்ந்து கொண்டே போகும் முடிவே இல்ல தீராத ஆசைகள்
மனிதன் ஆசையை அடக்கவே ஆசை கொள்கிறான்
அதே சமயத்தில் ஆசையை அடையவும் கொள்கின்றான்.
அன்பான ஆசைகள் மனதை அளிக்கிறது
அளவுக்கு அதிகமான ஆபத்தான ஆசைகள் உன்னையும் உன் வாழ்க்கையும் அழிக்கின்றது.

எழுதியவர் : முத்துக்குமரன்.பி (7-Dec-21, 2:18 pm)
சேர்த்தது : முத்துக்குமரன் P
Tanglish : manitha aasaikal
பார்வை : 128

மேலே