குடும்ப வாழ்க்கை மிகவும் இனிமையானது - இனியவை நாற்பது 2

இன்னிசை வெண்பா

உடையான் வழக்கினி தொப்ப முடிந்தால்
மனைவாழ்க்கை முன் இனிது மாணாதா மாயின்
நிலையாமை நோக்கி நெடியார் துறத்தல்
தலையாகத் தானிது நன்கு. 2

- இனியவை நாற்பது

பொருளுரை:

பொருளுடையவனின் வள்ளல் தன்மை இனிமை யானது.

மனைவியின் மனமும், கணவனின் மனமும் மாறுபாடின்றி ஒன்றுபடுமானால் குடும்ப வாழ்க்கை மிகவும் இனிமையானது.

அவ்வாறு பொருந்தி வராதென்றால், யாக்கை முதலியன நிலையாமையை எண்ணி தாமதியாதவராக அகம் புறமாகிய இருவகைப் பற்றுகளையும் விடுவது முக்கியமாக மிக மிக இனிமையானது.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (7-Dec-21, 3:44 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 19

மேலே