பந்தமில் லாத மனையின் வனப்பு - இன்னா நாற்பது 1

இன்னிசை வெண்பா

பந்தமில் லாத மனையின் வனப்பின்னா
தந்தையில் லாத புதல்வ னழகின்னா
அந்தண ரில்லிருந் தூணின்னா வாங்கின்னா
மந்திரம் வாயா விடின். 1

- இன்னா நாற்பது

பொருளுரை:

அன்பில்லாத இல்லாளுடன் ஆன இல்வாழ்க்கையின் அழகு துன்பமானது.

தந்தை இல்லாத பிள்ளையின் அழகு துன்பமானது.

துறவோர் தம் வீட்டில் தங்கி, ஊண் உண்டு இருப்பது துன்பமாகும்.

அது போல, தக்க துணையுடன் சூழாது செய்யும் வினை துன்பம் பயக்கும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (7-Dec-21, 3:53 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 19

மேலே