நாட்கள் முடிகிறது

நாட்கள் முடிகிறது
நாங்கள் நகைக்கும்
நாட்கள் முடிகிறது...
வருடங்கள் மூன்று - ஆனால்
நாங்கள் சொற்பொழிவாற்றும்
தருணங்கள் ஏராளம்...
துன்பத்தில் இருந்த போது காரணம்
கேட்கும் நட்பு கிடைத்ததே தாராளம்...
எங்களுக்குள் வழக்கு - இருப்பினும்
நாங்களே கணித துறையின் விளக்கு...
நாள் ஒன்றிற்கு ஆறு வகுப்புகள்
ஒவ்வொரு வகுப்பிலும் ஒவ்வொரு ஞானிகள்...
இவைகளெல்லாம் - நாங்கள்
இழக்கும் நாட்கள் வருகிறது.
கல்லூரி வாழ்க்கை முடிகிறது...
- நாச்சான்

எழுதியவர் : நாச்சான் (9-Dec-21, 4:12 pm)
சேர்த்தது : நாச்சான்
Tanglish : nadkal mudigirathu
பார்வை : 433

மேலே