சவுதி அரேபியாவிலிருந்து

நியூட்டனைப் பொருத்த வரை...
புவிஈர்ப்பு விசை
கீழ்நோக்கி இழுக்கும்...
என்னைப் பொருத்த வரை...
இந்தியா நோக்கியும் இழுக்கும்..

எல்லோருக்கும் சூரியன்
உதிக்கும் திசை கிழக்கு...
எனக்கு இப்போது இந்தியா
இருக்குமிடம் கிழக்கு...

உலகம் முழுமையும்
சுற்றிப் பார்க்க
இலவசமாய் ஒரு டிக்கெட்.. விலை
சில மடங்குகள் அதிகமாய்
இந்தியாவிற்கு டிக்கெட்...

எது வேண்டும் உனக்கு
என என்னைக் கேட்டால்
இரண்டாவதையே கேட்பேன்...

இசையில் எது இனியது...
நான் சொல்வேன்...
அய்யா நீ எப்ப வருவ ஊருக்கு
எனக் கேட்கும் என் தந்தை
குரலின் இசை...

கொஞ்ச நாட்களாய்
இருபத்து நான்கு மணி நேரமும்
வெளிச்சத்தில் தெரிகிறது
இந்தியா எனக்கு...
😀👏👍💐🌹🙏

எழுதியவர் : சுந்தரராஜன் ராஜகோபால் (9-Dec-21, 1:13 pm)
சேர்த்தது : இரா சுந்தரராஜன்
பார்வை : 112

மேலே