நகைச்சுவை துணுக்குகள்37

அவர்:வக்கீல் சார், உங்க சார்ஜ் எவ்வளவு?

வக்கீல்: சட்டப்பிரகாரம் உங்களுக்கு நான் ஏதாவது செய்யணும்னா அதுக்கு என்னோட சார்ஜ் 500 ரூபாய்.
சட்ட விரோதமா நீங்க ஏதாவது செய்யணும்னா, அதுக்கு என்னோட சார்ஜ் 5000 ரூபாய்.
****************
ஏன் அழுறீங்க?
நேத்து ராத்திரி ஒரு கனவு கண்டேன் உன்னை யாரோ கொன்னுட்டதாக.
கனவுதானே. அழாதீங்க.
அது வெறும் கனவாப்போச்சேன்னு நெனச்சித்தான் அழறேன்.
*******************
மனைவி: நான் நாளைக்கே செத்துட்டேன்னு வெச்சிக்கோங்க. நீங்க என்ன பண்ணுவீங்க?

கணவன்: அப்படி சொல்லாதே. எனக்குப்பைத்தியமே பிடிச்சிடும்.

மனைவி: நீங்க வேறே கல்யாணம் பண்ணிப்பீங்களா?

கணவன்: யார் கண்டா,பைத்தியம் பிடிச்சா என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது?
*******************
கணவன்: நான் உபயோகப்படுத்தின அழுக்குத்துணிகள் நிறைய இருக்கு. இதை யெல்லாம் யாராவது சாப்பாட்டுக்கே வழியில்லாத ஏழைங்களுக்கு தானம் பண்ணலாம்னு இருக்கேன்.
மனைவி: உங்களோட துணிகளை போட்டுக்கொள்ளக்கூடிய பாடி அளவுள்ள எவனும் சாப்பாட்டுக்கே வழியில்லாத ஏழையா இருக்கமாட்டான்
**************
இவன் தான் எங்க வீட்டு செல்லப் பிள்ளை.
அட, அப்படியா?
ஆமாம். செல்லை எடுத்தான்னா, நாள் முழுக்க செல்லைக் கீழே வெக்கவே மாட்டான்.
******************
டீச்சர்: ஒரு வருஷத்துலே எவ்வளவு செகண்ட ஸ் இருக்கு?
மாணவன்: 12
டீச்சர்: என ன ? 12 ஆ? எப்படி?
மாணவன்: ஜனவரி 2nd, பிப்ரவரி 2nd, மார்ச் 2nd, இந்த மாதிரி ஒவ்வொரு மாதத்திலும் ஒரு செகண்ட்
***********
அசட்டுப பிச்சு: நான் நேத்துக்கு மாலுக்குப்போனேனா? அங்கே முதல் மாடியிலே ஒரு மேப் இருந்தது. அதுலே நீங்க இங்கேதான் இருக்கீங்க ( you are here) போட்டு இருந்தது அப்பா? நான் அங்கே முதல் தடவையா போறேன். அப்படி இருந்தும் நான் அங்கேதான் இருக்கேன்னு அந்த மேப்புக்கு எப்படி அப்பா தெரிஞ்சது?
**********

எழுதியவர் : ரா.குருசுவாமி (11-Dec-21, 4:58 am)
சேர்த்தது : ரா குருசுவாமி
பார்வை : 127

சிறந்த நகைச்சுவைகள்

மேலே