மகாகவி

"இன்று பிறந்தார் பாரதி,
என்றும் ஜொலிக்கிறது அவர் ஏற்றி வைத்த அறிவின் ஜோதி!

தேன் போன்ற தமிழ் மொழியில்
தீ போன்ற கருத்துக்களை புகுத்தி,
மக்கள் மனதில் ஞான ஒளியை
செலுத்தி,
அனைவரும் உயர பாடுபட்டார்
தன்னை வருத்தி.

அவர்தம் ஏற்றமிகு கவிதைகளால்
கூர்மையானது புத்தி,
நல் மாற்றம் பல கண்டிடவே
கிடைத்தது நேர்மையான யுக்தி,
போற்றுதற்குரியவரால் கிடைத்தது எல்லாருக்கும் புத்தம் புதிய சக்தி.

அன்றும் இன்றும் என்றும்
அவரே ஓளி மங்கா காவிய தீ,
என்று அவரை நினைத்திட்டாலும்
பரவிடும் தாகமிகு கவிதை தீ.

வாழ்க என்றென்றும் மகாகவி
பாரதியார் அவர்கள் புகழ்."

எழுதியவர் : (11-Dec-21, 11:01 am)
சேர்த்தது : லக்க்ஷியா
Tanglish : makakavi
பார்வை : 181

மேலே