சுப்பிரமணி - பாரதியின் - 140வது பிறந்த நாள்
பா வில் இரத்தினம் போன்று
உயரிய பொருளை வைத்து
பாட்டை எழுதிய எட்டையப்புரத்தானின்
பட்டப் பெயர் பா - ரதி என்பதாம்
கலைமகளை கற்றோர் துதிப்பதும்
கலைகளிலே ஞானம் பெற வேண்டி
கலைகள் கற்றோர் அவளை அழைப்பதும்
பா-ரதி என்ற பொருளின் பொருளிலே
சுப்பிரமணியும் தமிழைக் கற்று செழித்து
செப்பினான் எளியோருக்கு புரியும் பாடல்களை
செல்லமாள் தீயில் இறங்கிய திரெளபதியாய்
தினமும் சமைக்க திண்டாடினால் வறுமையால்
தங்கம்மாள் சகுந்தலா என்ற இரண்டு பிள்ளைகளை
தங்கத் தமிழால் காக்கவே இயலாமல்
பொங்கும் துயரத்துள் மூழ்கி மூழ்கியே
மங்கா புகழ்கொண்ட செல்லமாள் வளர்த்தாளே.
எளியதான தமிழின் வார்த்தையால் எங்கும்
பளிச்சென கருத்தினை புகுத்தி தமிழை
களித்திட வைத்த பெருங்கவி சுப்பையா
பாரதியை நெஞ்சுருகி நினைத்து போற்றுவோமே.
--- நன்னாடன்.