கருணை உண்டு
கருணை உண்டு
சுழித்தபடி
ஓடும்
காட்டாறு
செம்மை நிறத்தில்
கோபம் கொண்டு
ஆக்ரோஷமாய்
எல்லாவற்றையும்
இழுத்து உருட்டியபடி
அரக்க பரக்க
ஓடுகிறது
சற்று முன்
அங்கும்
இங்கும்
கடந்து விட்ட
மனித ஜீவன்கள்
திரும்பி பார்க்க
நடந்து வந்த
பாலம் காணாமல்
ஓ ! காட்டாற்றுக்கும்
கருணை உண்டு…!