நிலவை சிறைபிடித்து
நிலவை சிறைபிடித்து
இருளுக்குள்
சிக்கியிருந்த
அந்த பகுதி
இருட்டுக்குள்
திணறி கொண்டிருக்க
அருகில் இருந்த
குளத்துக்குள் மட்டும்
கொஞ்சம் வெளிச்சம்
எட்டி பார்க்க
நிலவை சிறை
பிடித்து
உள்ளே வைத்திருக்கிறது
குளம்
அதன் வெளிச்சத்தில்
அங்கும் இங்கும்
நீந்தி கொண்டிருக்கும்
மீன்கள் கூட்டம்