பிறக்கப் போகுது புத்தாண்டு குழந்தை

ஒன்றிரண்டு பெற்றெடுக்கவே
முடியாத இந்தக் காலத்தில்
இன்னும் ஒரு வாரத்தில் ஒருத்திக்கி
இரண்டாயிரத்து இருபத்தி
இரண்டாவது பிரசவமாம்
ஸ்கேன் பாக்கல
சத்து மாத்திரை சாப்டல
மாதம் மாதம்
செக்கப்புக்கு போகல
தடுப்பூசி போடல
வியக்க வேண்டாம்
அவ்வளவும் சுகப்பிரசவம்
குடும்பக் கட்டுப்பாடும்
இவளுக்கு கிடையாது
குழந்தைத் தட்டுப்பாடும்
இவளுக்கு கிடையாது

எழுதியவர் : வ. செந்தில் (22-Dec-21, 8:13 pm)
சேர்த்தது : Senthil
பார்வை : 42

மேலே