ரகு பிறந்தநாள் வாழ்த்து

பிறந்தநாள்
வாழ்த்துக்கவி
ரகுவிற்கு அன்னையின் தாலாட்டு



கண்ணுரங்கும் மேவழகா
கனி உறங்கும் பூவழகா
பண்ணுரங்கும் பாவழகா
மண்ணுரங்கும் தீவழகா

நீ சிப்பிக்குப்
பிறக்காது
சிந்திக்கப் பிறந்த முத்து
நீ பணம் கொண்டு
வாங்காது என்
மனம் கொண்டு வாங்கிய சொத்து

நீ கோயில் கருவறையில்
பிறக்காது
இத் தாயின் கருவறையில்
பிறந்தவன்

உனக்கு இன்று பிறந்தநாள்
ஊருக்கு இன்று சிறந்த நாள்

நீ கதிரவனுக்குப் பிறந்த
கதிரவன்
இச் சந்திர கலா
வயிற்றில் உதித்த
சந்திர நிலா

மண்ணுக்குள் தோன்றாது
இப் பெண்ணுக்குள்
தோன்றிய வைரம் நீ
நான் பத்து மாதம் அல்ல
மொத்த மாதமும்
கேட்டு பெற்ற வரம் நீ

எனக்கு நீ மகன்
பிறருக்கு அன்பு செய்வதில்
நீ பிதா மகன்

நீ மேகதில் மழை
பிறப்பதைப் போல
என் தேகத்தில்
மழையாய் பிறந்தவன்
என் மகிழ்ச்சி கதவுகளை
மழலையாய் திறந்தவன்

நீ அன்பின் நகல்
அறிவின் துகள்
அழகில் ஏற்றி வைத்த
அகள்
நீ விழித்திருக்கும்
நேரம் தானடா எனக்குப் பகல்


நீ நூராண்டும்
ஊராண்டும்
இப்பாராண்டும்
வாழ அன்போடு
வாழ்த்துகிறேன்

எழுதியவர் : Kumar (23-Dec-21, 8:13 am)
சேர்த்தது : புதுவைக் குமார்
பார்வை : 40

மேலே