வெளி வேஷம்
வெளி வேஷம்.
என் மீது
எவருக்கும்
கோபம் இல்லை!
எனக்கு
எதிரி என்று
எவருமில்லை!
எதனாலே என் மீது
இறைவனுக்கு கோபம்
என்று, அவனிடமே
நான் கேட்டபோது,
புன்னகைத்தான்!
உன் மனதில்
உள்ளது எவருக்கும்
தெரியாது,
எனக்கு அது
தெரியும்,
என்பது போல்!
ஆக்கம்
சண்டியூர் பாலன்.

