பிரபஞ்ச அழகி 2021
ஹர்னாஸ் சந்து...
எல்லோரும்தான் கொண்டு
சென்றிருப்பார்கள்.. பிரபஞ்ச அழகி
எனத் தேர்ந்தெடுக்கப்பட்டவுடன்
சொல்ல வேண்டிய வார்த்தைகளை..
இவளுடையது மட்டும்தானே
அரங்கத்தில் அரங்கேறியது...
அழகு மட்டுமா ஆராயப்பட்டது...
அழகோடு அறிவும்... சமயோசிதமும்
பண்பும்... பழகும் விதமும்...
மொழியும்... புத்திசாலித்தனமும்
அல்லவா ஆராயப்பட்டது...
குழு சொல்லியது அத்தனையிலும்
சிறந்தவள் இவள்தான் என்று..
ஹர்னாஸ் சந்து...
இந்தச் சிற்பம் தன்னைச்
செதுக்கிய சிற்பிகளோடு
தானும் சேர்ந்து தன்னை
அழகாய் செதுக்கிக் கொண்டது
எல்லோரும் விரும்பும் வண்ணம்...
பிறந்த பொழுதிலிருந்தே
பூமியில் விழுந்த பௌர்ணமி
ஒளி எல்லாம் விழிகளில்
அள்ளி சேர்த்து வைத்தாளோ...
ஈர்க்கும் கண்களில்தான்
எத்தனை வெளிச்சம்...
ஒளியும் இருளும் ஒன்று
சேரலாம்... அழகு சேர்க்கலாம்...
அதற்கு நல்லதொரு உதாரணம்
ஹர்னாஸின் நிலவு முகமும்
அழகுக் கூந்தலும்...
பாதுகாப்பு தீபாவளி கொண்டாட
பிரபஞ்ச அழகி இவளது
மத்தாப்பு சிரிப்பையும்
சேர்த்துக் கொள்வார்களோ
இனி இவளது பஞ்சாப்பில்...
ஒயிலான நடைக்கு மயில்களின்
நடையை உதாரணம் சொல்வதை
சற்று நிறுத்தி வைக்கலாம்.. இனி
அழகிப் போட்டியில் மயில்களை
மிஞ்சிய இவளது வசீகர நடையை
சொல்லிக் கொள்ளலாம்...
பிரம்மன் தன்னைத் தானே
மெச்சிக் கொள்வான்...
உலகம் மெச்சும் அழகி
இவளைப் படைத்ததற்கு.. நமக்கு
கண்கள் இரண்டு போதாது
இவள் அழகை ரசிப்பதற்கு.....
ஹர்னாஸ் சந்து...
தேர்ந்தெடுக்கப்பட்டவுடன்
சபையில் சொன்னாள் நன்றி...
நானும் சொல்கிறேன் நன்றி
ஹர்னாஸ்.. உன்னால் உலகத்தின்
அத்தனை உதடுகளும் இந்தியா
என்ற இனிய வார்த்தையை
இன்று உச்சரிக்கின்றன...
இவளது கைக்கடிகாரத்திடம்
கேட்க வேண்டும்... இவளது
திட்டமிடலின் தீர்க்கத்தை..
கூலிங்கிளாஸ் கண்ணாடியிடம்
கேட்க வேண்டும்... வெற்றிபெற
என்னென்ன செய்தாள்..
எதையெல்லாம் பார்த்தாள்...
படித்தாள் என்று...
ஹர்னாஸ், உலகத்தின் அத்தனை
அழகிகளையும் வென்று விட்ட நீ...
இனி உலகத்தின் அத்தனை
இதயங்களையும் வென்றுவிடு.
வாழ்த்துகிறேன்...
நடக்கும் நந்தவனம்... பேசும்
பூங்காவனம்... இன்னொரு
ஃபிப்டி கேஜி தாஜ்மஹாலை...
அன்புடன்...
ஆர்.சுந்தரராஜன்.
😀👏👍💐🌹🍫