பிரிய நண்பன் பரதன்
கல்லூரி நண்பர்களின் பட்டியலை
பிற நண்பர்களிடம் வாசிக்கையில்
அகர வரிசையில் வராது.. அது
அன்பு வரிசையில் வரும்...
முதல் மூன்று இடத்துக்குள்
பரதன் நீ வருகிறாய்.... நட்பில்
முதன்மையாய் இருக்கிறாய்...
உன்னிடம் கோதிக்கொள்ள
இன்றும் உண்டு கேசம்...
மகிழ்ந்து கொள்ள
என்றும் உண்டு நேசம்...
தேகத்தை ஆட்டும் மார்கழிப்
பனிப் பொழுதில் பிறந்த நீ
விரைவான வாய்மொழியை
வேகமான உடல்மொழியை
தக்க வைத்துக் கொண்டாய்...
பேராசிரியர்களின் வகுப்புகளில்
உன்னோடு இருந்திருக்கிறேன் அன்று
உனது வகுப்புகளில் உன்
மாணவர்களோடு இருக்க
ஆசைப்படுகிறேன் இன்று...
ஆசைப்பட வைத்தது உனது
இன்னொரு மாணவன்...
அவனும் எனக்கு நண்பன்...
என் உடன் பணி புரிபவன்...
நட்பின் மகிமையை
உன்வழி உணர்கிறேன்... உன்
பயிற்றுவிக்கும் திறமையை
அவன்வழி உணர்கிறேன்...
உலகத்தில் நிறையபேர் தமக்காக
வாழ்ந்து கொண்டிருக்கும்போது
நீ உலகத்திற்காகவும் வாழ்கிறாய்.
ஏனெனில் நீ... ஆசிரிய சாதி...
இதை விட சொல்வதற்கு
வேறென்ன இருக்கிறது மீதி...
பிரிய நண்பன் பரதனுக்கு
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்...
வாழ்க பல்லாண்டு...
வசந்தங்களின் வரவேற்பில்
வளங்கள் எல்லாம் பெற்று...
அன்புடன்.. ஆர். சுந்தரராஜன்...
😀👏👍🙏🌹💐🌺