இயற்கை

கருவானம் கண் மறைய
புல்லினங்கள் மரம் நிறைய
பூ வாசம் மனம் வீச
பைங்கிளிகள் தமிழ் பேச.....

தென்றலின் மெல்லிசையில்
பூங்குயிலின் இசை மழையில்
பளிச்சென்று முகம் காட்டும் கண்ணாடி பனித்துளியில்...

விண்ணோடு கைகோர்க்கும்
இரவோடு பகல் சேர்க்கும்
பாரோடு கண் பார்க்கும்.....

காலை கதிரவனே... என் காலை வணக்கம் ஏற்பாய்.. 🙏🙏🙏

எழுதியவர் : Suresh (31-Dec-21, 11:29 am)
சேர்த்தது : பொங்க பானை 🏺
Tanglish : iyarkai
பார்வை : 293

மேலே