பிடிக்கவில்லை

பிடிக்கவில்லை.

இரவுக்கும் பகலுக்கும்
கல்யாணம்,
இது இறைவன்
நிச்சயித்த கல்யாணம்.

இரவுக்கு பகலைக்
கண்டால் வெட்கம்
தான் கறுப்பென்று,
பகலுக்கோ இரவைப்
கண்டால் பயம்
அது பேயென்று!
இருவரும் இதனால் பேசியதில்லை.

இறைவன்
யோசித்தான்.....!
சந்திரனை,
சூரியனுக்கும்
பூமிக்கும் நடுவில்
நிற்க சொன்னான்!
இரவும் பகலும்
சந்தித்தார்கள்
சில நிமிடம்!

அவர்களுக்கு
ஒருவரை ஒருவர்
பிடிக்கவில்லை,
இறைவன் முயற்சி
பலிக்கவில்லை!

ஆக்கம்
சண்டியூர் பாலன்.

எழுதியவர் : சண்டியூர் பாலன் (31-Dec-21, 10:10 am)
சேர்த்தது : இ க ஜெயபாலன்
Tanglish : pidikkavillai
பார்வை : 81

மேலே