நீர் வீழ்ச்சி
நீர் வீழ்ச்சி
ஓடும் ஆற்றில்
அழகிய
சிற்பங்களாய்
கூழாங்கற்கள்
இவைகளை
உரசியே செதுக்கியவன்
ஒய்யாரமாய்
கடந்து செல்கிறான்
சல சலவென
சப்தமிட்டு
சென்றவன்
எல்லையில் நின்று
தயங்கிய பின்
எட்டி பாய்ந்து
விழுகிறான்
ஆழ்ந்த குட்டைக்குள்
நீர் வீழ்ச்சியாய்..!