Maram

கோடாரியின் கோபமுத்தம்
தீண்டுகிற நொடி
வேரோடு சாய்க்கப்படுகிறது..
கான்க்ரீட் தீவுகளுக்குள்
கதவுகளாய்
அறையப்பட்டோம்!..
கரியமில வாயுவை
காற்றில் சுத்தீகரித்து
ஆக்சிஐனாய் உருமாற்றி
ஓசோனை அடைகாத்தோம்..
வெப்பமயானமாகும் பூமியை
ஆட்கொள்ள
மேகத்தின் ரசவாதத்தில்
மழையாக்கி குளிர்வித்தோம்..
வேர்களின் ஊடுருவலில்
நிலச்சரிவை
மீட்டெடுத்தோம்..
நிலத்தடி நீரளவை
குறையாமல் காத்து
நின்றோம்..
உதிர்கிற சருகுகள்
கூட உரமாய் மாறும்
உன்னதம்
பூக்களையும் கனிகளையும்
கொடுத்து கொடுத்தே
பறவைகளின் உயிரை
பத்திரமாய்
பார்த்து கோண்டோம்..
கோடாரியின் கோபமுத்தம்
தீண்டிய நொடி
வேரோடு சாய்க்கப்படுகிறது
பூமியின் எதிர்காலம்..
மரங்களற்று உலகம்
பரிதவிப்பதை பார்க்காத
வெட்டப்பட்ட
வேரின் இரங்கற்பா!

எழுதியவர் : ஆனந்த kumar (27-Dec-21, 6:28 pm)
சேர்த்தது : Ananth
பார்வை : 57

மேலே