பொங்க பானை 🏺 - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  பொங்க பானை 🏺
இடம்
பிறந்த தேதி :  15-Mar-1994
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  31-Dec-2021
பார்த்தவர்கள்:  175
புள்ளி:  4

என் படைப்புகள்
பொங்க பானை 🏺 செய்திகள்
பொங்க பானை 🏺 - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Feb-2022 6:00 am

பொன் தேரில் உலவும் மக ராணி இவளோ..
என் கையில் சேரும் மருதாணி இவளோ..
என் நெஞ்சம் கொய்த பூ மஞ்சம் அவளோ...
கல் நெஞ்சும் கரையும் நீரோடை அவளோ...

அவளை நினைத்தால் கனவும் பூக்கும்... கொஞ்சம் மறந்தால் என் உலகம் தோற்க்கும்..

காதல் கொண்டேன் முத்துச்சிரிப்பில்
உலகம் மறந்தேன் தேன் சிந்தும் நடிப்பில்..

இமையும் அசையா நித்திரம் கொள்ளா நித்தம் கேட்பேன் உந்தன் பேச்சி..
வரலாற்றில் நிலைக்கும் நம் காதல் கதைக்கு அந்த தேவன் சாட்சி...

மேலும்

பொங்க பானை 🏺 - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Jan-2022 4:18 pm

மரத்தடியில் மரமாக நின்றேன்..
பூ முகம் கொண்டவளை காண..
காய் கனி ஆயிற்று கனி இரை ஆயிற்று..
கனியவள் காணவில்லை....

கனவுகள் கண்கள் அகல வில்லை
நினைவுகள் நெஞ்சில் அழியவில்லை..
நினைத்தேன் உணர்ந்தேன் விழித்தேன்...

விழி பார்க்கும் திசை எல்லாம் அவள் முகம்..
வழி போகும் பயணமெல்லாம் இவள் சுவடு..
எதிர் பார்த்த பயணம் முடியவில்லை...


வாழ்கை வீதியில் தனியாக தவிக்கிறேன்.. கரம் தர மறு ஜென்மம் எடு....... 😭😭😭

மேலும்

பொங்க பானை 🏺 - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Jan-2022 8:04 am

கவிதை படைக்க முயன்றேன்..
கவிதை கைவசம் இல்லை..
இன்னிசை பாட எழுந்தேன்.
வரிகள் என்னிடம் இல்லை..
மலர்வனம் கண்ணில் கண்டேன்
நாசி யில் வாசம் இல்லை..

தாயின் அன்பில் நின்றேன்
பந்தம் ஏனோ தெரியவில்லை..
சேயின் நிலையில் கண்டேன்
தாயின் அளப்பரிய அன்பை...

அன்னையின் அன்பிற்கு இணை எதுவுமில்லை.. எவருமில்லை..
அன்னையும் இப்போதில்லை...

கோடி கள் இருப்பினும் ஏழையே.... 👩‍👦👩‍👦‍👦👩‍👧👩‍👦‍👦👩‍👦

மேலும்

பொங்க பானை 🏺 - பொங்க பானை 🏺 அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
31-Dec-2021 11:29 am

கருவானம் கண் மறைய
புல்லினங்கள் மரம் நிறைய
பூ வாசம் மனம் வீச
பைங்கிளிகள் தமிழ் பேச.....

தென்றலின் மெல்லிசையில்
பூங்குயிலின் இசை மழையில்
பளிச்சென்று முகம் காட்டும் கண்ணாடி பனித்துளியில்...

விண்ணோடு கைகோர்க்கும்
இரவோடு பகல் சேர்க்கும்
பாரோடு கண் பார்க்கும்.....

காலை கதிரவனே... என் காலை வணக்கம் ஏற்பாய்.. 🙏🙏🙏

மேலும்

பொங்க பானை 🏺 - படைப்பு (public) அளித்துள்ளார்
31-Dec-2021 11:29 am

கருவானம் கண் மறைய
புல்லினங்கள் மரம் நிறைய
பூ வாசம் மனம் வீச
பைங்கிளிகள் தமிழ் பேச.....

தென்றலின் மெல்லிசையில்
பூங்குயிலின் இசை மழையில்
பளிச்சென்று முகம் காட்டும் கண்ணாடி பனித்துளியில்...

விண்ணோடு கைகோர்க்கும்
இரவோடு பகல் சேர்க்கும்
பாரோடு கண் பார்க்கும்.....

காலை கதிரவனே... என் காலை வணக்கம் ஏற்பாய்.. 🙏🙏🙏

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே