அன்று ஒரு நாள்

மரத்தடியில் மரமாக நின்றேன்..
பூ முகம் கொண்டவளை காண..
காய் கனி ஆயிற்று கனி இரை ஆயிற்று..
கனியவள் காணவில்லை....

கனவுகள் கண்கள் அகல வில்லை
நினைவுகள் நெஞ்சில் அழியவில்லை..
நினைத்தேன் உணர்ந்தேன் விழித்தேன்...

விழி பார்க்கும் திசை எல்லாம் அவள் முகம்..
வழி போகும் பயணமெல்லாம் இவள் சுவடு..
எதிர் பார்த்த பயணம் முடியவில்லை...


வாழ்கை வீதியில் தனியாக தவிக்கிறேன்.. கரம் தர மறு ஜென்மம் எடு....... 😭😭😭

எழுதியவர் : பொங்க பானை (26-Jan-22, 4:18 pm)
சேர்த்தது : பொங்க பானை 🏺
Tanglish : andru oru naal
பார்வை : 145

மேலே