உறுத்தல்

வாய் விட்டு அரற்றி
தாய் சொன்ன சேதி
செவிவழி உயிர் சேர
உடனிருத்தி சேவைகள் பல
செய்திட மனம் பதைத்ததுவே!!!

தாயின் மனம் அறிந்தும்
உடனிருத்த மனம் ஏங்கியும்
செய்ய இயலாத வருத்தம்,
இந்த இயலாமை தந்த
வலியில் எந்தன் மனம்
மறுகுதய்யா!!!

நான் குடியிருந்த கருவறையை
உடனிருத்தி பணிவிடை செய்திட
பெண் இவள் ஏங்குகையில்,
செய்யும் தகுதியற்று வெற்றுக்கை
ஏந்தி நிற்கும் அவளம்தான்
ஏனோ???

செய்ய இயலா இயலாமையினால்
இப்பெண் ஜென்மம் மனதிலெழும்
குருதி கொட்டும் வலியை
வாய்விட்டு உரையாட யாருளர்???

இவ்வுறுத்தல் மனதில்
குடி கொண்ட நஞ்சாக
மனம்கருக்க, மண் நோக்கும்
என்கண்கள் கண்ணீர் குளம்கட்ட
மனதின் வலி கூடக்கண்டேன்!!!

இவ்வுறுத்தல் எனை நீங்க
என் இறுதி தணலன்றி
வேறு எதுவும் உண்டோ???

எழுதியவர் : கவி பாரதீ (26-Jan-22, 4:10 pm)
சேர்த்தது : கவிபாரதீ
Tanglish : uruththal
பார்வை : 244

மேலே