மழைக்கு ஓர் வேண்டுதல்

"தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி'
பெய்திடல் வேண்டும் வாழ மக்கள் இனிதே
இம்மேதினியில்' நீரின்றி நிலமில்லை
நீரும் நிலமும் இன்றி இவ்வுலகில்
உயிரும் இல்லை இதுவெல்லாம் உண்மைதான்
ஆனால் பெய்யும் மழை நன்மையே பயக்கவேண்டும்
ஒருபோதும் வேண்டா அடை மழையாய்ப் பொழிந்து
ஆழி மழையாய் மாறிடக் கூடாது
எம்மை அழித்திடல் கூடாது ஆதலால்
இதுவரைப் பேய்ந்ததற்கு நன்றி ஆயிரம் ஆயிரம் மழையே
போதும் இனி பெய்திடல் வேண்டாம் இவ்வருடம்
மீண்டும் வருவாய் மிதமாய் அடுத்த பருவம்
இனி அதுவரைப் பெய்திடாமல் எம்மைக்
காப்பதும் உன் பொறுப்பே மழையே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (31-Dec-21, 2:02 pm)
பார்வை : 77

மேலே