புதிதாய் பூத்து வந்த புத்தாண்டு 2022

புதிதாய் பூத்து வந்த ஆங்கில புத்தாண்டு;
பூமியில் மலர்ந்தது இன்று இந்த 2022 ஆண்டு;
புரியாது தவித்து கடந்த ஆண்டை கிழித்து;
நம்பிக்கையாய் பிறந்தது இந்த ஆண்டு,
கலக்கத்தை, களங்கத்தைப் போக்க வந்த ஆண்டு; 2022;
நம் கவலைகளை மறக்க வைக்க வந்த ஆண்டு;
அன்பு உறவுகள் அணைவரையும் வாழ்த்த வந்த புத்தாண்டு 2022;
நாம் கவனமாய் இருக்க வேண்டும் இந்த ஆண்டிலும்.

எமனாய் வந்த கொடூர வைரஸ் வாயை அடைக்க;
நாம் முகக்கவசம் அணிவோம்;
வாயில் வரை வைரஸ் வராது தடுக்கவே,
வழக்கம்போல் இல்லாமல், வருமுன் காப்போம்,
நாசினி தெளித்து.

பசி எடுத்து பாய்ந்து வரும் இந்த வைரஸை
பக்குவமாய் விரட்டிடுவோம் சமூக இடைவெளி மற்றும் வழி முறைகளை கடைபிடித்து;
கொடிய வைரஸின் கொட்டத்தை ஒழித்துக் கட்டுவோம்;
நாம் ஓடோடி ஒழியாது,
ஓட்டம் காட்டும் இந்த பெரும் தொற்று வைரஸை;
ஒழித்து கட்டவே உடன்பட்டு செயல்படுவோம்.

மனித இனத்திற்கே சவாலாய் இருக்கும் இந்த வைரஸை,
மண்ணைவிட்டே விரட்டி அடிப்போம்,
மாறுவேடம் போட்டு மீண்டும் மீண்டும் பிறப்பு எடுக்க விடாது தடுப்போம்.
விண்ணைத்தாண்டி சூரியனையே
சுற்றிவர செயற்கை கோளை அனுப்பிய இவனுக்கு.
விடைதேடத் தெரியும் என்பதை உறுதிசெய்வோம்.

விஞ்ஞான உலகின் விளையாட்டின் விவரீதமே,
வேண்டாத இந்த கொடிய வைரஸ்,
தேடித் தேடி வந்து நம்மை தொத்தி பிற உயிரினங்களையும் அழிப்பதற்கு முன்,
புவியை காப்போம்;
பூமி அன்னைக்கு பசுமை என்னும் புத்தாடை கட்டுவோம்.
.
புத்தாண்டை புதைந்துபோகும் ஆண்டாக மாற்றாது
பெருந்தொற்றை அழிப்போம்.

விணாக அடம் பிடிக்கும் வைரஸை வேற்று உலகத்திற்கு அனுப்பி வைப்போம்.

காசு பணத்தைத் தேடி ஓடும் மனிதக் கூட்டத்தின் ஓட்டத்தை தடை போட,
வந்த வைரசிடமிருந்து
தவறாது பாடம் கற்போம்;

உறவுகளை உதரித்தால்லாது; விரட்டியடிக்காது;
உணவுகளை சிதறி வீசாது;
உரிமைகளை விட்டுத்தாறாது;
உணர்வுகளைவிட்டு எறியாது;
மனம் போன போக்கில் வாழாது;
மனித நேயத்துடன் வாழ கற்றுக்கொள்வோம்;

ஆண்மீகமும் அறநெறியுமே
அறிவியல் வழிப்பயணத்தில்
அழிவை அகற்றும்; என்பதை உணர்வோம்.

அகிம்சையை கடைபிடிப்போம்;
அன்பை விதைக்கும் தளமாக
புவியை மாற்றி அமைப்போம்; இந்த புத்தாண்டில்
ஏழ்மையைப்போக்க ஏழையை எட்டி உதைக்காது எடுப்போம் சபதம்,
தொற்று நோய் வைரஸ் இல்லாத உலகமாக மாற்றி,
பஞ்சம் இல்லாத லஞ்சம் இல்லா உலகம் படைக்க,
நேசத்தோடு பாசக்கரத்தையும் நீட்டுவோம்;
கவலையை மறப்போம்;
மனித சமுதாயம் வாழ,
புதுமை மோகத்தை ஒழித்து
பூமியில் மீண்டும் புன்னகை மலர
பூச்சென்டை பிடித்து,
புத்தாண்டை வரவேற்போம்.

புழுங்கித் தவிக்கும் மனித இனம்,
புதையுண்டு போகாமல் இருக்க,
புனித பயணத்தை மனிதாபிமானத்துடன் தொடர்வோம்.

இயற்கையின் குழந்தைகள் நாம் என்பதை மறக்காது,
இயற்கையோடு சேர்ந்து வாழக் கற்றுக்கொள்வோம்.

பணவாடை பிடித்த மனித மனத்தில்,
பிணவாடை பிடிக்காது இருக்க,
பிடிவாதமாய் இருக்கும் மனிதனை,
பிடிக்கத்துடிக்கும் கொலை வைரசிலிருந்து காத்து,
மன்னியம் மனிதநேயத்தை வளர்ப்போம்,
புவி, மனிதன் இல்லா பூமியாக மாறுமுன், மனித இனத்தை காற்போம்;
மண்ணைக் காற்போம்;
மண் தரும் விசாயத்தைக் காற்போம்;
பொன் விளையும் பூமியாய் புவியை மீண்டும் உருவாக்குவோம்.
புன்னெறியில் புழுங்காது, நன்னெறியாம், சகமனித நேயத்தை . வளர்த்து,
சகோதரத்துத்துடன் வாழ்வோம்
சன்மார்க்க நெறியையும் கடைபிடிப்போம்.

துளிரட்டும் புத்தாண்டின் நாட்கள்;
தழைக்கட்டும் மனித இனம்;
வருகை தந்த 2022 புத்தாண்டை, வாயார வாழ்த்தி,
கரம் கூப்பி வணங்கி,
வருக வருக என்றே வரவேற்போம்

அ. முத்துவேழப்பன்

எழுதியவர் : அ. முத்துவேழப்பன் (1-Jan-22, 2:44 pm)
பார்வை : 5154

மேலே