புது வருடம் இனிதே மலர்ந்து நிற்கபிரார்த்தனை
' காலம்' நீதான் இறைவா காலனும் நீயே
கழிந்த வருடங்கள் இரண்டில் எம்மை
ஏனோ வறுத்தெடுத்துவிட்டாய் அது
ஏன் என்பதை நீயே அறிவாய்-இறைவா
போனது போகட்டும் உன் பிள்ளைகள்
எம்மை எம்பிழைகளெல்லாம் பொறுத்து
எமக்கு வழிகாட்டி ரட்சித்து இனிய
வருடமாய் இப்புது வருடம் அமைந்திட
உள்மனதால் வேண்டிநிற்கின்றேன் இறைவா
என்கோரிக்கையை ஏற்பாயா ஏற்று
இனிய புதுவருடமாய் ௨௦௨௨ மலர்ந்தே நிற்க
அருள்வாய் உலகெலாம் படைத்தது ஆள்பவனே