முப்படையுடன்
முப்படையுடன்.
உடுக்கு அடித்து,
ஆட்டம் ஆடி,
மண்டியிட்டனர்
மாரியிடம்.
கேட்டது போலும்!
வந்தாள்,
வந்தவள்
சத்தம் போட்டே
வந்தாள்!
முப்படையையும்
கூட்டி வந்தாள்,
இடி, மின்னல்
காற்றென.
குற்றுயிராய் இருந்த
பூமாதேவி,
அள்ளி அணைத்தாள்
வந்தவளை.
தேவியின் மடியில்
அயர்ந்து இருந்த
செடி, கொடி
மனிதெரெல்லாம்
மீண்டும் விழித்திட,
மாரி வந்தாள்
முப்படையுடன்.
ஆக்கம்
சண்டியூர் பாலன்
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
