மன்மதன் அம்புவீ சும்மாலை நேர மகிழ்வினிதே - கட்டளைக் கலித்துறை

கட்டளைக் கலித்துறை

முன்பனிக் காலத்தில் மொட்டவிழ் கின்றநல் முல்லைமலர்
புன்னகைப் பொன்னிதழ் பூந்தேன் ததும்பிடும் போதினிலே
மென்மலர்க் கூந்தலில் மேன்மைகொள் மல்லிகை மெத்தெனவே
மன்மதன் அம்புவீ சும்மாலை நேர மகிழ்வினிதே!

- வ.க.கன்னியப்பன்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (9-Jan-22, 12:53 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 31

மேலே