இரவில் நித்திரைப் பங்கம் - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
(’ய்’ இடையின ஆசு)
சித்த மயக்கஞ் செறியைம் புலத்தயக்கம்
எ’ய்’த்த லுறக்கமந்தம் என்பவைக - ணித்தமுற
வண்டுஞ் சிலரைநா யாய்ப்பன்னோய் கவ்வுமிராக்
கண்டுஞ் சிலரைநம்பிக் காண்
- பதார்த்த குண சிந்தாமணி
இரவில் நித்திரை செய்யாமலிருந்தால் புலன்களின் சோர்வு, கட்கம், பயம், அக்கினி மந்தம் முதலிய நோய்கள் உண்டாகும்