பத்தியம் உண்டவர்கள் பகல் நித்தரை செய்தல் - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

அண்டவங்கி யுண்டவுறை யங்கியரும் பத்தியத்தால்
அண்டவங்கி மூன்றோ டனந்தலது - கொண்டவங்கி
கூடுங்கால் நேத்திரநோய் கூடுமி ரத்தபித்த
நீடுங்காண் விந்துவு,நீ ராம்

- பதார்த்த குண சிந்தாமணி

பத்தியங் கொண்டோர்க்கு சூரிய வெப்பம், ஒளடத வெப்பம், கடும்பத்திய வெப்பம் என்ற 3 வெப்பத்துடன் பகல் நித்திரை செய்வதால் பிரிக்கின்ற வெப்பமுங் கூடி விழி நோய் உண்டாகும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (9-Jan-22, 7:19 pm)
பார்வை : 36

மேலே