அப்பா

தன் தேவைகளை வெளிக்காட்டாமல் சேவைகள் செய்திடும் ஒரு ஜீவன்
ஆரோக்கியத்தில் அக்கறை கொள்ளாமல் அயராது உழைத்திடும் ஒரு உயிர்
வீட்டு பந்தியில் அரை முட்டையில் ஆனந்தம் அடையும் ஒரு தூய ஆத்மா
என்னிடம் தோற்பதற்க்காகவே தோன்றிய தோழன்
தான் அடையா உயரத்தை நான் அடைய உதவிய ஏணி
தன்மானத்தை பல இடங்களில் எனக்காக விட்டுக் கொடுத்த தன்னிகரற்ற தகப்பன்
எனக்காக அள்ளி அள்ளிக் கொடுத்தும் அடங்காத பேராசைக்காரன்.
என் வாழ்வில் யாரும் கற்றுக் கொடுக்காத பாடங்களை கற்றுத் தந்த பேராசிரியர்
எனக்காக தன் ஆசைகளை துறந்த புத்தர்
எதிர்பார்ப்புகள் ஏதும் இல்லை
எளிமையின் முத்தப் பிள்ளை
நீங்கள் ஆற்றிய தொண்டு ஏராளம் நீங்கள் காட்டிய அன்பு தாராளம்...
நான் உங்களுக்கு கைமாறு செய்ய விழையும் போது என் போல் நீ உன் பிள்ளைகளுக்கு இரு அதுவே நீ எனக்கு செய்யும் கைமாறு என்று சொல்லிவிட்டு சொல்லாமலே போன அப்பா..

எழுதியவர் : தமிழ் அன்பு நேசன் (10-Jan-22, 12:51 pm)
சேர்த்தது : Sikkandar
Tanglish : appa
பார்வை : 139

மேலே