கற்றாரைச் சேர்ந்தொழுகின் நல்லறிவு நாளுந் தலைப்படுவர் – நாலடியார் 139

நேரிசை வெண்பா

கல்லாரே யாயினும் கற்றாரைச் சேர்ந்தொழுகின்
நல்லறிவு நாளுந் தலைப்படுவர் - தொல்சிறப்பின்
ஒண்ணிறப் பாதிரிப்பூச் சேர்தலாற் புத்தோடு
தண்ணீர்க்குத் தான்பயந் தாங்கு. 139.

- கல்வி, நாலடியார்

பொருளுரை:

இயற்கை மணச் சிறப்புடைய விளக்கமான நிறம் அமைந்த பாதிரிமலரைச் சேர்ப்பதால் புதிய மட்பாண்டம் தன்னிடம் உள்ள தண்ணீர்க்கு அதன் மணத்தைத் தந்தாற் போல,

தாம் கல்லாதவர்களாக இருந்தாலும் கற்றவர்களுடன் சேர்ந்து பழகினால் பண்பட்ட மெய்யறிவு நாள்தோறும் உண்டாகப் பெறுவர்.

கருத்து:

கல்வி பயிலும் பேறில்லாதார் கற்றாரோடு சேர்ந்து பழகுதலாவது மேற்கொள்ள வேண்டும்.

புதிய மட்பாண்டத்தில் முதலில் பாதிரி மலர்களைப் பெய்துவைத்துப் பின்பு அதில் நீரூற்றி நீர்க்கு நறுமணங் கூட்டுதல் மரபாதலின், ‘பாண்டம் மணத்தை ஏற்றுப் பின் நீர்க்குத் தரும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (12-Jan-22, 6:55 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 115

சிறந்த கட்டுரைகள்

மேலே