அழகே திமிரே -4
பரபரப்புக்கு பஞ்சமே இல்லாத அந்த மருத்துவமனை இன்னும் அதிக பரபரப்பாக இருந்தது..... அதற்க்கு காரணம் ICU வில் நடந்த கொலை...
மருத்துவமனைக்கு முன்னாள் வந்து நின்றது அந்த ஜீப்.... உள்ளிருந்து இறங்கினார் இன்ஸ்பெக்டர் விஜய்.... அவர் உள்ளே நுழைய முடியாத அளவுக்கு பத்திரிக்கையாளர் கூட்டம்...
இறங்கியவரை வரவேற்றார் ஹாஸ்பிடல் நிர்வாக ஊழியர் சந்தானம்.....
"ஹலோ சார்...."
"ஹலோ... நீங்க"
"சார் நான் ஹாஸ்பிடல் மேனேஜ்மென்ட் HR..... சந்தானம்"
"ஒ ஓகே..... என்ன ஆச்சி...."
"சார் எங்க ஹாஸ்பிடல் ICU வார்டுல இருந்த. பேசன்ட் யாரோ கொன்னுட்டாங்க சார்..."
என்டரன்ஸ் தாண்டி வலது புறம் இருந்த லிப்ட்டிற்கு வந்தார்கள்... ஏறி கொண்டே கேட்டு கொண்டிருந்தான் விஜய்....
"யார் பாடிய1st பாத்தது......"
"டூட்டி நர்ஸ். ஹேமா..."
"ஓகே அவங்கள இன்வெஸ்டிகேட் பண்ணனும் வர சொல்லுங்க.... அப்டியே ஹாஸ்பிடல் CCTV புட்டேஜ் வேணும்...."
"ஓகே சார்..,."
விசாரித்து கொண்டே வந்த விஜய் அந்த ICU வார்டினுள் நுழைந்தான்.... அங்கே உயிரற்ற சடலமாய் கிடந்தார் தொழிலதிபர் புருஷோத்தமன்.....
"இவர் இண்டஸ்ட்ரிலிஸ்ட் புருஷோத்தமன் தான...."
"ஆமா சார்..."
"என்னாச்சி அவருக்கு.... இவ்ளோ பெரிய இன்டெஸ்ட்ரிலிஸ்ட் அட்மிட் ஆனது எந்த நியூஸ் சேனலையும் வரல...!."
"சார் 2 டேஸ் முன்னாடி அவருக்கு ஒரு அச்சிடேன்ட் ஆகிடுச்சு... அது அவரை கொல்ல நடந்த முயற்சின்னு அவங்க பேமிலி பீல் பண்ணாங்க அதன் யார்கிட்டயும் சொல்லாம டிரீட்மென்ட் குத்துட்டு இருந்தோம்....."
"ஆக்சிடேன்ட் ஆனா போலீஸ்ல இன்போர்ம் பண்ணி FIR போட்ட பின் தான் டிரீட்மென்ட் கொடுக்கணும்னு ஒரு சட்டம். இருக்கே அது உங்களுக்கு தெரியுமா....."
சற்று கடுமையாக கேட்டான்....
"தெரியும் சார்... பட் இவர் கொஞ்சம் பெரிய இடம்...."
"ஒ அப்போ அவருக்கு சட்டம் எல்லாம் கிடையாத.... இதே ஒரு சாமானியன் ரோடுல அடிப்பட்டு கெடந்தா அவனை அட்மிட் பண்ண எவ்ளோ ஃபார்மாலோட்டிஸ் பாப்பிங்க பணக்காரங்கன்னா எதுமே கிடையாதுல.."
" சார் இது ஒரு பிரைவேட் ஆர்கனிசஷன்.... இதுல பணக்காரங்க அரசியல்வாதிங்க இவங்கள பகச்சிகிட்டா தொழில் பண்ண முடியாது.... ப்ளஸ் புரிஞ்சிக்கோங்க சார் "- மிகவும் கெஞ்சினார் சந்தானம்.....
இது அவர்களின் இயலாமை என்பதை புரிந்து கொண்டான் விஜய்.....
" சரி அந்த சிஸ்ட்டர் எங்க...??? "
"ஹேமா "
சந்தானம் அழைக்க வந்து நின்றார் ஹேமா...
"என்ன பாத்திங்களோ ஒன்னு விடாம சொல்லுங்க "- என்றான் விஜய்....
"சார் நான் இன்னைக்கு 1st ஷிப்ட்....காலைல டூட்டிக்கு வந்துட்டு பேசன்ட் கண்டிச்சன் அன்ட் ரிப்போர்ட் செக் பண்ணிட்டு போய்டுவேன்.... அப்டி தன் இன்னைக்கும் வந்தேன்.... ஆனா நான் வந்தப்ப புருஷோத்தமன் சாரோட ஆக்சிஜன் சப்ளை நின்னு இருந்துச்சி....பல்ஸ் நின்னு போய் இருந்தது ... EGC கூட ஒரே லைன் ஆஹ் இருந்துச்சி அதன் டாக்டர்ட்ட இன்ஃபர்ம் பண்ணுனேன்... எனக்கு வேற ஒன்னுமே தெரியாது சார்..."-. சொல்லும்போதே கண்ணீரும் பயம் இருந்தது ஹேமாவிற்கு....
அதை புரிந்து கொண்ட விஜய் அவளை அங்கிருந்தது போக சொன்னான்....... அவளும் சென்று விட்டாள்....
.
"Mr. சந்தானம் footage பாக்கலாமா ......"
"Sure சார்...."
செக்யூரிட்டி ரூமில் cctv மானிட்டர் முன் இருந்த ஆளிடம் நேற்றைய ரெகார்டிங்களை ஓட்டிக்காட்ட சொன்னார் சந்தானம்.... அவரும் ஆன் செய்ய.... வெண்திரையில் காட்சிகள் ஓட ஆம்பித்தது
....
அது எல்லாவற்றையும் பொறுமையாக பார்த்து கொண்டிருந்தார் இன்ஸ்பெக்டர் விஜய்..... ஆனால் அந்த மருத்துவமனையில் 7 கேமராக்கள் மட்டுமே இருந்தது...
" அவ்வளவு தான.. "
" ஆமா சார்... "
"எவ்வளவு பெரிய ஹாஸ்பிடல் ல வெறும் 7 கேமரா மட்டும் தான....."
" சார் இங்க வந்து தாங்குறவங்க எல்லாருமே vvip அவங்க பர்சனல் இஸ்ஸுஸ்காக கேமரா இருக்குறத விரும்ப மாட்டாங்க.... "
" ஏன் பண்ற தப்பெல்லாம் தெரிஞ்சிடும்ன்னா... "
அவர்கள் பேசிகொண்டிருக்கும்போதே ஒரு திரையில் சிக்கியது அந்த உருவம்.... சுறுசுறுப்பானான் விஜய்....
அந்த கிளிப்பீங்ஸ்ல் ஒரு ஆண் கருப்பு சட்டை பேண்ட் அணிந்து முகத்தை மறைத்தவாரு தலையில் தொப்பி கண்ணாடி..... முகமூடி போல கட்டிய கர்சிப்......
அந்த கேமராக்கு நேராக Department of Nephrology என்று இருந்தது.... அந்த போர்டில் on the way என்று எழுதினான்..... பிறகு கேமராவை பார்த்து ரஜினி ஸ்டைல்லில் ஒரு salute வைத்தான்.....
அதை பார்த்த விஜய் அதிந்து போனார்....
ஷாலினி வீட்டில் உலகமே அழிந்தது போல அமர்ந்திருந்தாள். தனது அலைபேசியில் கார்த்திக் அவளை முத்தமிட்ட காட்சியை ஓட விட்டு பார்த்து கொண்டிருந்தாள் .... அவளுடன் நேஹா......
"இது உனக்கு தேவையா டி.... அவன்கிட்ட வம்பு வசிக்காதன்னு சொன்னேன்ல எவ்ளோ அசிங்கப்படுத்திட்டான் பாரு..."
அமைதியாக மொபைலையே பார்த்து கொண்டிருந்தாள் ஷாலினி......
" என்ன டி எதுமே பேசமாட்ற... சரி டயம் ஆச்சு நான் கிளம்புறேன்"
அப்போதும் அமைதியாக இருந்தாள் ஷாலினி.... அவளின் அமைதிக்கு காரணம் புரியவில்லை ஆனாலும் அவள் தவறாக ஏதும் செய்ய மாட்டாள் என்ற நம்பிக்கையில் சென்றாள் நேஹா...
தன்னை தானே நொந்து கொண்டிருந்தான் கார்த்திக்....கண்ணாடியில் தன் பிம்பத்தை பார்த்தான்... அவனை பார்க்க அவனுக்கே அருவருப்பாய் இருந்தது..... கையில் கிடைத்த பொருளை கொண்டு அந்த கண்ணாடியை சுக்கு சுக்காக நொறுக்கினான்....
"என்ன காரியம் பண்ணிட்டேன் .... ஒரு பொண்ண அவன் சம்மதம் இல்லாம தொடறது தப்புனு தெரிஞ்சும் எப்படி டா இப்டி பண்ண.... அதும் என் வர்ஷாக்கு அப்புறம் எந்த பொண்ணு மேலையும் எனக்கு கோவமோ வேற உணர்வோ வந்தது இல்லையே... அவளை அடிச்சிருக்கலாம் ஆன நான் ஏன் இப்டி பண்ணுனேன்.... என் வர்ஷாக்கு துரோகம் பண்ணிட்டேன் வர்ஷாட்ட மன்னிப்பு கேக்கணும்..."
தனக்குள்ளேயே பேசிக்கொண்டவன்...
ஒரு நோட்டை எடுத்தான் அவன் எந்த தவறு செய்தாலும் அந்த இரவே வர்ஷாவிடம் மன்னிப்பு கேட்க அந்த நோட்டில் அவனால் முடிந்த அளவு im sorry varsha..... I love you varsha என்று எழுதுவான்... இது போல ஒரு ராக் முழுதும் நோட்டுக்கள் வைத்திருந்தான்....
ஷாலினியிடம் தான் நடந்து கொண்ட விதத்திற்கு வர்ஷாவிடம் மன்னிப்பு கேட்க அந்த நோட்டையை எடுத்தான்..... வரிசையாக...sorry varsha i love you varsha என்று எழுதினால்.... தற்செயலோ இல்லை விதியோ..... Im sorry varsha... I love youu varsha..... தானாக im sorry shalini... I love you ஷாலினி என்று மாறியது....
வழக்கத்திற்கு மாறாக நான்கு பக்கங்கள் எழுதியதை திருப்பி பார்த்தான் கார்த்திக்.
பெயர் மாறி இருந்ததால் அதிர்ந்தான்.....
"ஷாலினி யார் ஷாலினி..."
யோசித்தாவனுக்கு அன்று ஷாலினி மொபைலில் வால்பேப்பரில் அவளது புகைப்படதோடு. ... இருந்த வசனம் நினைவு வந்தது...
"Shalini i'm the queen..."
அவனை அறியாமலே அவள் பெயர் அவன் மனதின் பதிந்ததை உணர்ந்தான் கார்த்திக்.....