மாதுளம் பழம் - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

சங்கையறச் சொற்றவிர்க்குஞ் சந்நியா சஞ்சர்த்தி
யங்கையதி தாகமமைச் சாருமோ - கங்கை
இருந்தாடி மக்கட் கிரத்தலைச்செய் நோய்போம்
இருந்தாடி மக்கனிகட்(கு) எண்

- பதார்த்த குண சிந்தாமணி

நேரிசை வெண்பா

வாய்நீர்ஊ றல்கசப்பு வாந்திவிக்கல் மந்தமிகக்
காய்வெப்பம் நெஞ்செரிவு காதடைப்பும் ஓயா
மயக்கமுந் தீர்ந்துவிடும் மாதுளம்,ப ழத்தால்
தயக்கமறத் தேமொழியே சாற்று

- பதார்த்த குண சிந்தாமணி

நினைப்பையும் பேச்சையும் ஒழிக்கின்ற சந்நியாச நோய், வாந்தி, கபம், பித்தம், மலடு இவை நீங்கும்; வாய் நீருறல், வாந்தி, வாய்க்கசப்பு, விக்கல், மாந்தம், அதிசுரம், நெஞ்செரிவு, காதடைப்பு, மயக்கம் இவை நீங்கும்;

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (22-Jan-22, 9:05 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 10

மேலே