மாதுளம் பழம் - அறுசீர் ஆசிரிய விருத்தம்

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)

வெடித்துவீழ் பழத்தை வாங்கி மெல்லிய சீலை கட்டி
கடுக்கெனப் பிழிந்து கொண்டு கண்டுசர்க் கரையுங் கூட்டிக்
குடித்திட வெப்பு மாறுங் குளிர்ந்திடும் அங்க மெல்லாம்
வடித்தநன் மொழியி னாளே மாதுளம் பழத்தின் சாறே

- பதார்த்த குண சிந்தாமணி

வெடித்த பழத்தைப் பிழிந்து மெல்லிய துணியினால் வடிகட்டி தகுந்த கற்கண்டு சேர்த்து சாற்றை உண்டால் சூடு தணியும்; உடல் குளிரும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (22-Jan-22, 9:07 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 19

மேலே