அழகே திமிரே -5

போலீஸ் ஸ்டேஷன் தான் பார்த்த கிளிப்ய்ங்சை பதிவிறக்கி தன் மொபைலில் போட்டு பார்த்து கொண்டிருந்தார் விஜய்....


"அந்த மர்ம நபர் எதோ clue தன் குடுத்திட்டு போயிருக்கான் ஆனா அது என்னனு தன் புரிய மாட்டேங்குது....."- மனதிற்குள் யோசித்தபடி அந்த வீடியோவையே மீண்டும் மீண்டும் போட்டு பார்த்தார் விஜய்....

சட்டென்று மூலையில் பொறிதட்டியது...... தன் டேபிள் மேலிருந்த போன் ரிசிவேரை எடுத்து யாரையோ அழைத்தார்.....

அடுத்த ஐந்தாவது நொடி அவர் முன்பு வந்து நின்றார் தீனா... சப்-இன்ஸ்பெக்டர் ஆப் போலீஸ் (மனசுல சிங்கம் சூர்யான்னு நெனப்பு).....

"எஸ் sir"- என்று சல்யூட் ஒன்றை வைத்தார்....


" நான் ஒரு முக்கியமான கேஸ் பத்தி விசாரிச்சிட்டு இருக்கேன்..... உங்க ஹெல்ப் எனக்கு கொஞ்சம் வேணும் "


" sure சார்... நான் என்ன செய்யணும் "



" ஒன்னும் வேணாம் எனக்கு ஓவர் ah டென்ஷன் ஏறாம மட்டும் பாத்துக்கோங்க... " - என்று சிரித்தான் விஜய்....


தலையில் உள்ள தொப்பியை கீழே வைத்துவிட்டு....


" போடா டேய்... என்ன பாத்தா எப்படி. தெரியுது உனக்கு... ஒன்னு வச்சேன் வை நீ ஒரேடியா கோமா ஸ்டேஜ் போய்டுவ "....


" ஏன் மாப்ள இப்டி டென்ஷன் ஆகுற... காலைலேந்து யோசிச்சி மண்டை காஞ்சி போச்சி அதன் உன்கிட்ட கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணலாமேனு தான் கூப்பிட்டேன்... "


"நீ ரிலாக்ஸ் பண்ண நான் என்ன உன் லவர் ah டா..."


"சரி சரி டென்ஷன் ஆகாத...."



"சரி என்ன கேஸ் அது..."


"அது தான் டா அந்த புருஷத்தமன் கேஸ்... Cctv footage ல ஒரு மேட்டர் சிக்குச்சி அது தான் என் மண்டை காச்சலுக்கே காரணம்..."


"அப்டியா அத போடு பாப்போம்..."



விஜய் அவன் போனை ஆன் . செய்ய அந்த ஆண் வந்தது எழுதியது சல்யூட் வைத்தது எல்லாவற்றையும் பார்த்தான் தீனா...


"இதுக்கு என்னடா அர்த்தம் "


" அதான் எனக்கும் குழப்பமா இருக்கு.... "


" ஒரு வேல அடுத்த கொலை nephorological deprtment ல பண்ண போறானோ.... "


"நான் அந்த அங்கிள்லையும் விசாரிச்சி பாத்துட்டேன் டா.."

"அங்க இருக்குறது 2 பேஷண்ட் தான்.... 2 பேரும் சிறுநீரக கோளாறுக்காக டிரீட்மென்ட் எடுத்துக்குறவங்க...... பெருசா பேக்கிரௌண்ட் லாம் இல்ல எல்லாருமே..... மிடில் கிளாஸ் தான்.... நெறைய பணம் குடுத்தான் தான் நல்லா டிரீட்மென்ட் கிடைக்கும்னுக்குற நெனப்பு இருக்குற சாமானியர்கள்...."


" டேய் மச்சான்.... இந்த ஹாஸ்பிட்டல் ஓகே பட் வேற ஹாஸ்பிட்டல் ல இருந்தா.... "


அப்போதுதான் புரிந்தது விஜய்க்கு மற்ற ஹாஸ்பிட்டல்களில் தான் விசாரிக்காத்தது..
அதன் பின் ஒவ்வொரு ஹாஸ்பிட்டலாய் விசாரிக்க ஏற்பாடு செய்தான் விஜய்....






ஊருக்கு ஒதுக்கு புறமாக ஆள் அரவமற்ற பகுதி... சக்தி இப்போது அந்த வழியில் தனது பைக்கில் சென்று கொண்டிருக்கிறான்... அவன் எதிர்பார்த்த வீடு வந்தது... பார்ப்பதக்கு கைவிடப்பட்ட வீடு போல இருந்தது.. பெயிண்ட் உரிந்து கொட்டி.... வாசல் கம்பி எல்லாம் துருப்பிடுத்து.....
அந்த கேட்டை தாண்டி உள்ளே சென்றான் சக்தி...

உள்ளே குமிருட்டு.... எதோ ஒரு மூலையில் சிறு வெளிச்சத்தில் ஒரு போர்டில் புருஷோத்தமானின் போட்டோவை சிகப்பு மார்க்கரால் (❌️) அடித்து கொண்டிருந்தான் அவன்...



"முகுந்த் "-அழைத்தான் சக்தி....


திரும்பினான்... கலைந்த கேசம்.... அடர்ந்த புருவம்... வெறியும் திடமும் நிறைந்த கண்கள்... அதன் உஷ்ண கதிர்களை மறைக்க தடிமனான பிரேம் போட்ட பவர் கிளாஸ்.... மூன்று நாட்கள் ஷேவ் பண்ணாத தாடி......


"நீ கேட்ட செகண்ட் டீடெயில்ஸ்...."


"நேம்.." - என்றான் முகுந்த்....

"சீனியர் அட்வொகேட் பரந்தாமன்.."









....



"எஸ் im சீனியர் அட்வொகேட் பரந்தாமன்..."
என்று தன் ஆபிஸ் சேர்ரில் அமர்ந்து கொண்டு வந்த கிலைன்ட்டிடம் சொல்லி கொண்டிருந்தார்.....


"சார் என் பையன் தருண் கூட படிக்கிற பொண்ண லவ் பண்ணிருக்கான்.... அவ ஒதுக்கல... வேற பையன வேற லவ் பண்ணிருக்கா.... அதன் கோவத்துல அவ முகத்துல ஆசிட் அடிச்சிட்டான்.... நீங்க தான் கொஞ்சம் பெரிய மனசு பண்ணி என் பையனுக்காக வாதாடணும்...."


"இந்த காலத்து பசங்களுக்கு ஆனாலும் ரொம்ப தான் கோவம் வருது..... ம்ம்ம்.... பொண்ணு பேக்கிரௌண்ட் பெருசா..."


"இல்லங்க சார்.... மிடில் கிளாஸ் பொண்ணு தான்..."


"அப்புறம் என்ன அவளோட parents கிட்ட பேசி ஏதாவது செட்டில்மெண்ட் பண்ணிட வேண்டியது தானே..."

"பேசி பாத்துட்டேன் சார் அந்த பொண்ணும் சரி அவங்க குடும்பமும் சரி என் பையன உள்ள தள்ளுரத்துலேயே குறியா இருக்காங்க...."


"மிடில் கிளாஸ் மெண்டட்டாளிட்டி.... அவங்களுக்கெல்லாம் பணம் பெருசே கெடையாது சார்.... பொழைக்க தெரியாதவங்க..... ஆனா தன்மானம் மட்டும் ஜாஸ்தி...."

"சார் இந்த கேஸ் மட்டும் ஜெயிச்சி குடுத்துடுங்க.... உங்கள நான் நல்லா கவனிச்சிக்கிறேன்..."


"ஓகே பைன்.... அந்த பொண்ணு எந்த டிபார்ட்மென்ட்...."



"கெமிஸ்ட்ரி சார்...."


"அப்போ வசதியா போச்சி..... காலேஜ் மேனேஜ்மென்ட் கிட்ட சொல்லி கெமிஸ்ட்ரி லேப்ல ஒரு அச்சிடேன்ட் நடந்துருக்கு... பாய்லட் கெமிக்கல் ப்ளாஸ்ட் ஆகிடுச்சுன்னு ஒரே ஒரு கேஸ் மட்டும் பைல் பண்ண சொல்லுங்க மத்ததெல்லாம் நான் பாத்துக்குறேன்...."


"ஓகே சார்...... இதுல அட்வான்ஸ் 2 லக்ஸ் இருக்கு...."- பெட்டியை நீட்டினான்...


"அப்போ நாங்க கிளம்புறோம் சார்..."


"ஓகே வாங்க மண்டே கோர்ட்ல பாக்கலாம்...."


தன் விதி என்னவென்று தெரியாமல் வந்தவர்களுக்கு வழி சொல்லி கொண்டிருந்தான் பரந்தாமன்......



பின் தன் காரில் ஏறி கோர்ட் செல்ல ஆயத்தமானான்..... அவன் கார் கேட்டை தாண்டிய நேரம் எங்கிருந்தோ வந்த லாரி அவன் கார் மீது மோதியது....

கண்ணாடிகள் சுக்கால் சுக்காலை நொறுங்க ரத்த வெள்ளத்தில் மிதந்தான் பரந்தாமன்.......

















காலேஜ் வகுப்பறையில் நேஹா முன் ஷாலினி. .


"என்ன டி சொல்ற உனக்கு என்ன பைத்தியமா... அந்த பொறுக்கிய போய் லவ் பண்றேங்குற...."


" நான் அவன லவ் பண்றேன்னு எங்க சொன்னேன்... அவனை கல்யாணம் பண்ணிக்க போறேன்னு தானே சொல்றேன்.... "

. "என்ன டி லூசு மாதிரி பேசுற..... லவ் பண்ணல ஆனா மேரேஜ் பண்ணிக்க போறியா..."


"ஆமான் டி...... எல்லார் முன்னாடியும் என்ன அவமான படுத்தினான்ல.... அவன பழிவாங்க தான் இந்த கல்யாணம்...."



"ஹே லூசு பழிவாங்குறேன்னு உன் தலைல நீயே மண்ண வாரி போட்டுக்காத... அவன் ரொம்ப மோசமானவன்..."

" ஹே நீ என்ன சொன்னாலும் சரி... அவன என் வழிக்கு கொண்டு வந்து மேரேஜ் பண்ணி அவனை பழி தீக்குறேன்..."


என்று கேன்டீன் நோக்கி சென்றாள் ஷாலினி....


"ஐயோ கடவுளே கிணறு வெட்ட பூதம் கிளம்புனா கதையாள இருக்கு...."நேஹா மைண்ட்வாய்ஸ்..........

எழுதியவர் : நிலாமகள் (22-Jan-22, 12:41 pm)
சேர்த்தது : nilamagal
பார்வை : 104

மேலே