அழகே திமிரே -6

போலீஸ் ஸ்டேஷன்....


தலையில் கை வைத்து அந்த நாற்காலியில் சாய்ந்து அமர்ந்திருந்தார் விஜய்.... பக்கத்தில் தீனா "என்ன ஆனால் எனக்கென்ன" என்பது போல டீ யில் பட்டர் பிஸ்கட் நனைத்து சாப்பிட்டு கொண்டிருந்தான்...அவனை முறைத்து பார்த்து கொண்டிருந்தான் விஜய்.... விஜய் பார்ப்பதை வாயில் பிஸ்கட்டை வைத்து கொண்டே பார்த்த தீனா..

" சாரி மாப்ள ரெண்டு தான் இருக்கு.... "

" டேய் இங்க என்ன பிரச்னை போயிட்டு இருக்கு உனக்கு பட்டர் பிஸ்கட் தான் இப்போ முக்கியமா.... "



"என்ன என்னடா பண்ண சொல்ற... நானும் நீ சொன்ன மாதிரியே.... எல்லா ஹாஸ்ப்பிட்டலையும் போய் விசாரிச்சேன்... எந்த nephorological டிபார்ட்மென்ட் லையும் எந்த டீடெயில்ஸ்மே கிடைக்கல... அவன் என்ன ரமணா படத்துல வர மாதிரி ஆர்டர் படியா கொன்றான்.... நான் கண்டுபுடிக்க..."



"என்னடா சொல்ற..."


"நீ ரமணா படம் பாத்தது இல்லையா... அதுல ஒரு டிபார்ட்மென்ட் ல அதிகமா லஞ்சம் வாங்கினவங்க லிஸ்ட் தமிழ்நாடு முழுக்க எடுத்து அதுல பஸ்ட் 15 பேரை கடத்தி.. அதுல நம்பர் ஒன்னா உள்ள ஆள கொல்லுவாங்க.. கடத்தல் பண்ணி 3 வது நாள் தான் கொல்லுவாங்க... அந்த மாதிரி எதாவது க்ளு இருந்த நான் கண்டுபுடிப்பேன்..."



தீனா சொன்னதை அமைதியாக கேட்டு கொண்டிருந்த விஜய்... 3 நாள் என்றதும் நிமிர்ந்து அமர்ந்தான்.....


"புருஷோத்தமக்கு ஆக்சிட்டென்ட் ஆகி இரண்டு நாள் ICU ல வச்சிருந்து அதுக்கு அடுத்த நாள் கொலை பண்ணிருக்காங்க...
ஆக்சிடென்ட் கொலை முயற்சின்னா அதுக்கு மறுநாளே ஹாஸ்ப்பிட்டல் கொலை நடந்திருக்கலாம் ஏன்னா அவர் அட்மிட் ஆனது யாருக்கும் குறிப்பா எந்த மீடியாக்கும் தெரியாது.... ஆனா 3வது நாள் கொன்னுருக்காங்க... அப்போ இது தான் க்ளூ...."


தனக்குள்ளே பேசிக்கொண்டான்....


"டேய் சாப்ட்டது போதும் வாடா வேகமா... "
சொல்லி கொண்டே அந்த ஸ்டேஷன் வாசலை நோக்கி சென்றான்....

"டேய் எங்க டா.... டேய்... இவன் கூட சேந்துட்டேன்ல இனி பச்ச தண்ணி கூட நிம்மதியா குடிக்க முடியாது..." - சலித்து கொண்டே பின் தொடர்ந்தான்.....








ஊருக்கு ஒதுக்கு புறமான முகுந்த் வீடு....

அங்கே பகலிலுமே இருள் தான்..... தன் மனதில் பழைய நினைவுகளை அசைப்போட்டா படி ஆடும் நாற்காலியில் ஆடி கொண்டிருந்தான் முகுந்த்....



மெடிக்கல் காலேஜ் அவார்ட் function...


மேடையில் இந்தியா வின் மிக பெரிய டாக்டர்ஸ் மற்றும் காலேஜ் மேனேஜ்மென்ட் HR..... மருத்துவ கல்லூரி மேலாளர்கள்.... சுகாதார துறை அமைச்சர்... எல்லாரும் அமர்ந்ததிருக்க அந்த விழா இனிதே ஆரம்பம் ஆனது.... மருத்துவ துறையில் சாதனை செய்த சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் விழா.... அங்கே தொகுப்பாளாராக இருந்தாள் மருத்துவ கல்லூரி மாணவி ஸ்வேதா.....


"அடுத்ததாக.... மருத்துவ கல்வி துறையில் முதல் முறையாக... மனிதர்களின் மூலக்கூறு(DNA) அமைப்பில் ஆராய்ச்சி செய்து அதில் வெற்றி பெற்று.. மெடிக்கல் ரிசர்ச் கவுன்சில் ஆப் இந்தியா மற்றும் பன்னாட்டு மருத்து ஆராய்ச்சி மையங்களில் பாராட்டு பெற்ற நமது கல்லூரி இறுதியாண்டு மாணவர்...
Mr. Dr. முகுந்த் "......


ஒட்டு மொத்த அரங்கத்தின் கர கோசங்களுடன் ....
மொத்த பத்திரிகைகளும் அவனை படம் பிடிக்க..... மேடை ஏறினான் முகுந்த.....







தன் இப்போதைய நிலை பற்றியும் யோசித்தான் முகுந்த்.....



"என் வாழ்க்கை இப்படி தடம் மாறும்ன்னு நான் நினைக்கவே இல்ல... நான் வாழ நெனச்ச வாழ்க்கை இது இல்ல... ஆனாலும் இப்போ நான் வாழற இந்த வாழ்க்கை தான் அர்த்தமுள்ள வாழ்க்கை..."



"முகுந்த் "- அழைத்தான் சக்தி...


"கண்டிஷன் என்ன "


"உயிர் இருக்கு..... காயம் ஜாஸ்தி..... ICU ல தான் இருக்கான்..."


"எந்த ஹாஸ்பிடல்..."


"RVR மெடிக்கல் மிஷன்..."


அவனிடம் ஒரு ஊசி மருந்தை கொடுத்தான் முகுந்த்......


" ரொம்ப careful ah இருக்க சொல்லு.... "


" டேய் அதெல்லாம் ஸ்வேதா பாத்துக்குவா டா "


"அப்டி இல்ல..... அஜாக்கிரதையா இருக்காதா... அவ வெளிய வர வரைக்கும் எனக்கு டென்ஷன் தான்..."


"ஏன் டா இருக்காது அவ உன் லவர் ஆச்சே..."


"இப்ப இது ரொம்ப முக்கியம்... போடா முதல நாம நெனச்சது நடக்கட்டும் கடைசில உயிரோட இருந்தா பாக்கலாம்.,"

. " ஏன் டா இப்டி பேசுற... "


" இதெல்லாம் பேசுற நேரம் இல்ல இது முதல நான் சொன்னதை முடி..."


அதோடு அந்த உரையாடலுக்கு முற்று புள்ளி வைத்தான் முகுந்த்........






வர்ஷாவின் நினைவுகளோடு இருந்தவனை இன்று பெரிதாக பாதித்திருந்தது ஷாலினியின் வருகை.... அவன் இதயம் அதை ஏற்க மறுத்தது......



தன் வர்ஷா நிம்மதியாக தூங்கி கொண்டிருக்கும் கல்லறையில் தலை சாய்த்து கண்கள் மூடி படுத்திருந்தான் கார்த்திக்..... அவன் கண்களில் நீர் நிற்காமல் வந்து கொண்டிருந்தது.... அந்த கல்லறை அவன் சோகத்தை முழுவதுமாக அறிந்த ஒன்று..

சில நாட்களில் அர்த்தம் ராத்திரியில் கூட அங்கு வந்து படுத்திருப்பான் கார்த்திக்....
தன் மனதில் உள்ளவற்றை வர்ஷாவிடம் சொல்ல இதை ஒரு வழியாக கருதினான் கார்த்திக்....


"பொண்டாட்டி நீ இல்லாம தப்புக்கு மேல தப்பா பண்ணிட்டு இருக்கேன் டி... அந்த பொண்ணு பாவம் டி... நான் ஏன் இவ்ளோ கேவலமா நடந்துகிட்டேன்.... இவ்ளோ பொண்ணுங்க என்ன திட்டிட்டு போயிருக்காங்க நான். அத பத்தி எல்லாம் கவலைப் பட்டதே இல்ல.... இந்த பொண்ணு என்னை டென்ஷன் ஆக்கிட்டா டி... எனக்கு கோவம் வந்தா.... உன்ன கூட நான் அடிக்க தான் செஞ்சிருக்கேன்.... பட் அவளை.... உனக்கு நான் எழுதுற நோட்ல அவ பேர் எப்படி வந்துச்சி.... எனக்கு எல்லாமே கொளப்பமா இருக்கு.... எது எப்படியோ என் வாழ்க்கைல நீ மட்டும் தான்.... உன் இடம் வேற யாருக்கும் இல்ல.... எனக்கு இனியும் இங்க இருக்க புடிக்கல.... எனக்கு உன்ன பாக்கணும் போல இருக்கு டி பொண்டாட்டி.... ஐ லவ் யூ டி..... நானும் வரேன் டி....."


என்றாவாறு தன் மணிகட்டு நரம்பை அந்த ப்ளேட் சைஸ் கத்தியால் வெட்டினான்...... ரத்தம் வெளி வர வெளி வர.... மெல்ல தன் சுய நினைவை இழந்து கொண்டிருந்தான் கார்த்திக்.....



..

எழுதியவர் : நிலா மகள் (23-Jan-22, 8:35 am)
சேர்த்தது : nilamagal
பார்வை : 140

மேலே