அலுத்துவிட போகிறது உன் காதலும் எனக்கு
உன் காதல் கிடைக்காத என ஏங்கிய
நாட்கள் தொலைந்து போக
உனக்கும் அலுத்து விட்டது போலும்
நம் காதல் உனக்கு
இன்னுமும் அதே காதலுடன் நானிருக்க
பேச மறுக்கிறாய்
காதலை மீண்டும் முதலில் இருந்து
தொடங்குகிறாய் என்னை ஏங்க வைக்க
பக்குவமாய் நடந்து கொள்
அலுத்துவிட போகிறது உன் காதலும் எனக்கு