எனக்கு என வளர்ந்தவளே

எனக்கென பிறந்தவளே
எனக்கென வளர்ந்தவளே

உனக்கென தந்திட
உள்ளம் உள்ளதடி

கள்ளம் இல்லா வண்ணம்
பள்ளம் மேடு சில உண்டு

பார்த்து நீபழகுடி
பழதும் தான் பாரடி

உளி கொண்டு நீ செதுக்க
சிலையாய் நானும் ஒளிர்வேன்

களைத்து நான்நின்ற போதெல்லாம்
கடுஞ்சொல் தவிர்த்தவளே

உனக்கு ஏதடி இவ்வளவு திறம்
நித்தமும் நீதருகிறாய் புதுமணம்

திருமண பந்தத்தின் போது
சின்னப் பொண்ணு இவ
பார்த்துக்குங்க ... என்ற

உன்உறவும் அறியலையே
உன்மகிமை ...இப்போ வாழ்வு

வந்தபோதும் தாழ்வுயெனை
தள்ளிய போதும் தாங்கி பிடித்து

அள்ளியவளே ...என்மனதை
கிள்ளியவளே ... பைங்கிளியே

புதுத்தாலி புதுவாசம் கொண்டு புன்னகை பூட்டி புதுநேசம் காட்டி

புதுதேசம் எனும் புகுந்த வீடு
புகுந்தவளே ... புது மலரே

கொஞ்சி பேசும் கண்கொண்டு
அஞ்சி...அஞ்சிநீ பேசியதெல்லாம்
பழங்கதை ...

இப்போ நாம் வாழும் கதை

குப்பைமேனி எனை கோபுரம் ஆக்கினாய் ...அதில் கொலுவாய் நீ

தெருகோடி தாண்டி என்பெயர் தெரியா... எட்டு திக்கில் எனை

அறிந்தனர் பலரே ...இந்தமுட்செடி
முல்லை மலர் உனைச்சூடி தருதே
புதுமணம்...

நீஎங்கோ பிறந்து
எனை அறிந்தாய்

இப்பாடம் எப்பள்ளியில்
பயின்றாய் ...

அப்பள்ளியில் நானும் துயில் கொண்டாவது ...

உனை அறிய ஆசைப்படுகிறேன் யென் அன்பே

எனக்கென பிறந்தவளே
எனக்காக வளர்ந்தவளே...

வாழிய நீ என்னோடு இறைஅருள்
துணை உடன் என்றும்

நம்மணம் நறுமணம் கமிழ
திருமணம் கண்டு இருமணம்

ஒருமணம் ஆக ஒன்ற ...
உயர்வு எனும்

உன்னதம் வாழ்வில்
தேடி வரும் நாடி நவில்வோர்க்கு .

திருமணம் என்றும் தீதில்லா பந்தம்.

அன்றில் அது ஆகிடும் தீப்பந்தம்

புது மண தம்பதியினர் புரிந்து
வாழ வாழ்த்துகள்

எழுதியவர் : பாளை பாண்டி (23-Jan-22, 6:24 am)
சேர்த்தது : பாளை பாண்டி
பார்வை : 546

மேலே