டயம் லூப்

காலையில் கண் விழித்தான் சிவா... மணி பார்த்தான் 6.30

"ச்ச இன்னைக்கும் லேட்...."- புலம்பி கொண்டே எழுந்தான்.... தன் அன்றாட பணிகளை முடித்தான்..... அவனது கைபேசி விடாமல் இம்சிக்கவே அதை எடுத்து தன் காதுக்கும் தோளுக்கும் இடையில் நெருக்கி அதற்கு ஆதரவாய் தன் தலையை சாய்த்து கொண்டான்.... அழைத்தது அவன் ஆருயிர் காதலி காயத்திரி.....

"ஹாய் புருஷா.... என்ன பண்ற...?"


"இத கேட்கவா டி காலங்காத்தால போன் பண்ண... நான் ஆபீஸ் கிளம்புறேன் டி... எதுனாலும் கொஞ்சம் சீக்கிரம் சொல்லு..."


"ஆமா இவர் பெரிய கலெக்டர்... Medi-rep தான டா நீ... கொஞ்சம் லேட்டா ah போன என்ன..."


" அம்மா தாயே இந்த வேலையும் இல்லனா எவனும் என்ன மதிக்க மாட்டான்... உன்கிட்ட சண்டை போட எனக்கு டயம் இல்ல எதுனாலும் சீக்கிரம் சொல்லு... "


" ஹ்ம்ம் இன்னைக்கு அப்பா உன்ன வீட்டுல வந்து பாக்க சொன்னாரு... நம்ம விஷயத்தை பத்தி பேச... அதை சொல்ல தான் கால் பண்ணுனேன் சொதப்பம வந்துடு ... "


" சரி டி ஈவினிங் கரெக்ட் ah வந்துடுறேன் டி.... "


" அது.... " -  என்று போனை வைத்தாள் காயத்திரி


"எல்லாம் என் நேரம்..."- என்று புலம்பியாவாறு அலுவலகத்திற்கு கிளம்பினான்.....









ஃபுல் ட்ராபிக்.... செம்ம கடுப்பாக அந்த காலை வெயிலில் தனது பைக்கை ரேஸ் செய்து கொண்டே நின்றான்....

சிக்னல் கலர் சிகப்பில் இருந்தது.... அவன் அருகே ஒரு ஆள் கையில் உணவுப் பொருட்களை வைத்து கொண்டு வியாபாரம் செய்து கொண்டிருந்தான்...

ஒரு காரில் ஒரு தம்பதியர் அவர்கள் கையில் ஒரு குழந்தை... அது ஏதும் அறியாமல் விளையாடி கொண்டிருந்தது.. அந்த குழந்தையின் முகத்தில் இருந்த சந்தோசம் அந்த தம்பதியர் முகத்தில் இல்லை....


ஒரு இளம் ஜோடி இந்த உலகை மறந்து காதல் உலகில் பயணப்பட்டு கொண்டிருந்தார்கள்....

சுற்றிலும் வெவ்வேறு மனிதர்கள்... வெவ்வேறு வாழ்க்கை.... வெவ்வேறு கஷ்டங்கள்....



சிக்னல் நிறம் மஞ்சள் ஆனது....

அவனுக்கு அருகில் இருந்த கார் அதன் வேகத்தை அதிக படுத்தி கொண்டே போனது....

சிவா அந்த காரை திரும்பி பார்த்தான்... அதில் கண்ணாடி ஜன்னல் வழியே அந்த குழந்தை இவனை பார்த்து சிரித்தது.... அதன் சிரிப்பில் தன் டென்ஷனை கொஞ்சம் மறந்தான் சிவா....


பச்சை வண்ணம் மாறுவதற்குள்.....


. கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த  கார் முன்னோக்கி சென்றது...


"சார் இன்னும் கிரீன் சிக்னல் விழல"- சிவா கத்திகொண்டிருக்கும் போதே அவன் கண்முன்னே அந்த கார்  இன்னோர் கார் மீது மோதியது..... அந்த வேகத்தில் கார் சுழன்றுது ......சிவா மீது மோத....









மீண்டும் தன் அறையில் தன் போர்வையை விலக்கி அரண்டு விழித்தான் சிவா..... தான் சாகவில்லை என்பதே அவனுக்கு ஆச்சர்யமாக இருந்தது.....


மணி பார்த்தான் 6.30.... மீண்டும் அதே நாள்... ஒரே குழப்பமாக இருந்தது சிவாவுக்கு..... அப்போது அவன் அம்மா வந்தார்...

"என்ன சிவா இன்னும் கிளம்பலையா.."

"ம்ம் கிளம்புறேன் மா..."

அவர் சென்று விட...

"ஒரே வேல கனவா இருக்குமோ.. இவ்ளோ தெளிவா கனவு வருமா..."- யோசித்துக்கொண்டே மீண்டும் அலுவலகத்திற்கு கிளம்பினான்....


மணி பார்த்தான் 7.30 இப்போ காயத்திரி கால் பண்ணணுமே... நினைத்து கொண்டிருக்கும்போதே கால் வந்தது..... யோசனையோடு எடுத்தான்....


"ஹாய் புருஷா.... என்ன பண்ற ..."


"நம்ம விஷயமா அப்பா பேச வர சொன்னாரா..."

"டேய் புருஷா.......எப்பிடிடா இவ்ளோ கரெக்ட் ah சொல்ற.... ஆமாண்டா ப்ளீஸ் கொஞ்சம் சொதப்பாம வந்துடுடா....."



"சரி டி...."


"டேய் மாமா ஏதும் பிரச்னை இல்லையே... "


"இல்ல டி... "


"சரி ஓகே டா..."




அந்த சிக்னல். சிகப்பு கலரில் இருந்தது..... சுற்றி பார்வையை சுழல விட்டான் சிவா.. அதே ஆள் இப்போதும் உணவுப் பொருட்கள் விற்று கொண்டிருந்தான்.... அதே காதல். ஜோடி..... அந்த காரை தேடினான்.... அப்போது வந்தது அந்த கார்.... அதே தம்பதிகள்... அதே குழந்தை.... அவனை பார்த்து சிரித்தது அந்த குழந்தை.... அவன் மனக்கண்ணில் அடிபட்டு  சுழன்று வந்த காரில் இறந்து ரத்தம் வழிய இருந்த அந்த குழந்தையின் முகம் வந்து போனது.....



வண்ணம் மஞ்சளுக்கு மாற... பரபரப்பானான் சிவா... தனது பைக்கை அந்த கார் க்கு முன்னாள் நிறுத்தினான்.....


பச்சை நிறம் ஒளிர.... வேறு ஒரு வாகனம் எதிரில் வந்த காரின் மேல் மோத அந்த கார் சிவவை நோக்கி வர.....





மீண்டும் தனது அறையில் போர்வையை நீக்கி அரண்டு எழுந்து அமர்ந்தான் சிவா.... மீண்டும் மணி பார்த்தான்...... 6.30 அதே நாள்....



"அய்யயோ போச்சு மாநாடு படத்துல வர மாதிரி  நமக்கு டே லூப் தான் ஆகுது.... இப்போ என்ன பண்றது.... இத சொன்ன எவனும் நம்ப கூட மாட்டானே...".


சிறிது நேரம் யோசித்தவன்.... தான் இன்று விடுப்பு என்று  அலுவலகத்திற்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பினான்....



காயத்திரியின் போன் க்காக காத்திருந்தான்..... 7.30 சரியாக காயத்திரியிடமிருந்து அழைப்பு வந்தது.....




"அப்பா இன்னைக்கு சாயங்காலம் நம்ம விஷயமா பேச கூப்பிட்டாரா..."- போனை ஆன் செய்தாவுடனே கேட்டான்...


இதை கேட்ட காயத்திரிக்கு ஆச்சர்யம்.......
"எப்படி டா புருஷா கரைக்டா சொல்ற...."



"ஹே எனக்கு டே லூப் ஆகுதுடி...."



"என்னது டே லூப் ah.... என்ன டா ஒளறுற... காலைலே சரக்கு ஏதும் அடிச்சிட்டியா..."


"அடியே நான் சொல்றத நம்பு டி.... சரி நீ இப்போ தானே எனக்கு போன் பண்ற நீ என்ன சொல்ல வந்தேன்னு எனக்கு எப்படி தெரியும்....  நான் எப்படி கரெக்ட் ah சொன்னேன்..."



"ஆமாண்டா... எப்படி சொன்ன..."



"இது ஏற்கனவே எனக்கு நடந்துருக்கு டி....."



"டேய் என்ன டா என்னென்னமோ சொல்ற...."



"நான் சொல்றத கேளு.... இன்னைக்கு ஒரு ஆக்சிடென்ட் நடக்க போகுது...."


"என்ன......"


"ஆமாண்டி.... நீ கிளம்பி சரியா 9.00 மணிக்கு பஸ் ஸ்டாப் சிக்னல்க்கு வந்துடு...."

போனை கட் செய்தான்.







கிளம்பி அதே சிக்னலுக்கு வந்தான்..... காயத்திரி அவளது ஸ்கூட்டரில் வந்தாள்....


சிக்னல் நிறம் சிகப்பு....


"என்ன டா போன்ல என்னென்னமோ சொன்ன...."


"ஹ்ம்ம் இப்போ ஒரு கார் வரும் பாரு...."


அவன் சொன்னது போலவே கார் வந்தது..... காரில் குழந்தையை பார்த்தாள் காயத்திரி ....


"டேய் மாமா அந்த குழந்தை ரொம்ப அழகா இருக்கு டா எப்படியாவது அந்த குழந்தையை காப்பாத்துடா......"


அன்று நடந்ததை முழுவதுமாக நினைத்து பார்த்தான்.... எதிரில் வந்த வாகனம் தான் தவறாக வந்திருந்தான்...

" நீ போய் இந்த கார் சிக்னலுக்கு முன்னாடி நகராம பாத்துக்கோ...."


அவளும் சென்று.... அந்த கார் க்கு முன்னால் அவளது ஸ்கூட்டரை நிறுத்தினாள்....






எதிரில் வந்த அந்த காரை சரியாக நிறுத்த வேண்டும் இல்லை எனில் அது ஓடி கொண்டிருக்கும் கார் மீது மோதி அந்த கார் காயத்திரியின்  மீது மோதும்.....



"ரொம்ப பெரிய ரிஸ்க் தான்.... சாரி டி பொண்டாட்டி..."

என்று அந்த ஜீப்ரா கிராஸ்ஸில் இறங்கி நடக்க தொடங்கினான்..... சரியாக அந்த கார் வர....





எதிரில் வந்து அந்த கார் முன்னாள் நின்றான்... சிவா... அதில் வந்தவன் போன் பேசி கொண்டே வந்தான் சிவா குறுக்க வர சட்டென்று பிரேக் அடித்தான்.... இருந்தும் சிவா மீது மோத........


காயத்திரி " சிவவாவாவா........!"  என்று அலறினாள்.....



அறை மயக்கத்தில் ரத்த காயத்தோடு திரும்பி பார்க்க...... இடது புற சாலையில் மிதமான வேகத்தில் அந்த கார் சென்றது.... அதிலிருந்த குழந்தை.... பின் சீட்டின் கண்ணாடி வழியே சிவாவை பார்த்து கை அசைத்தது..... அதை பார்த்த பின் தான் நிம்மதியானான் சிவா....

பதறி அடித்து அவன் அருகில் வந்தாள் காயத்திரி .... "ஒன்னும் இல்ல டி......" - அவளை சமாதானம் செய்தான்..... சின்ன களோபரத்துடன் முடிந்தது......


அன்றிறவு .. போனில்



"என் மாமா அந்த பாப்பா இப்போ என்ன பண்ணிட்டு இருக்கும்.... "



"என்ன பண்ணிட்டு இருக்கோ நல்லா இருந்தா சரி....."


"எனக்கு இப்ப கூட நம்ப முடில மாமா...உனக்கு டே லூப் ண்ணு ஒரு விஷயம். நடந்தத...."



"நானே நம்ப முடில..... பட் ஒரு விஷயம் டி... ஒரு தடவ ஒரு நிமிஷம். ண்ணு நாம டிராபிக் ரூல்ஸ் பிரேக் பண்ண கூட அது எவ்ளோ பெரிய இழப்பை கொண்டுவரும்ன்னு புரிஞ்சிகிட்டேன்..... இனி....


. ❤ ஹெல்மேட் போடணும்

. ❤ no போன். கால்ஸ் இன் ட்ரிவிங்

❤obey டிராபிக் சிக்னல்ஸ்....

❤ no  drink அண்ட் டிரைவ்




தான் டி பொண்டாட்டி "




"சூப்பர் டா மாமா கீப் இட் up...... சரி எப்போ அப்பாவை பாக்க வர....."


"நாளைக்கு....."

எழுதியவர் : நிலா மகள் (28-Jan-22, 9:13 am)
சேர்த்தது : nilamagal
பார்வை : 141

மேலே