என்றென்றும் அவள் விழிகளில் - 2

வேகமா மேல இருந்து கீழ வந்த பந்து அந்த பயலையும் தாண்டி அவனுக்கு பின்னுக்கு இருந்த வரப்பையும் தாண்டி விழுந்து பக்கத்துல இந்த வறண்ட நிலத்துலையும் நல்லா செழுச்சு படர்ந்து உசரமா வளர்ந்து தனியா நின்னுக்கிட்டுருந்த வேப்பமரத்துக்கு அடியில உருண்டு போயி கிடந்தது.

அவ்வளவுதான் பந்த அடிச்சவன் டீம்ல இருந்தவங்களாம் ஒரே கத்து. இவங்க போட்ட சத்தத்துல வேப்பமரத்துல கரைஞ்சுட்டு இருந்த காக்கலாம் சட்டுனு றெக்கைய அடிச்சுட்டு பறந்து போச்சுங்க.
இவங்களோட இந்த சத்தத்தை கேட்டுட்டு பந்த பிடிக்க நின்னுட்டு இருந்த அந்த பய "ரொம்ப ஆடாதீங்கடா... ஒரு மேட்ச் தானே ஜெய்சீங்க அடுத்த மேட்ச்ல பாருங்கடா நாங்க எப்படி ஜெய்கிறோம்னு காத்திட்டு பந்து போட்டவனை பாத்து இவ்ளோ நாளா விளையாடுற எப்படி பந்து போடணும்னு தெரியாதானு" அவனை ஒரு கடி கடிச்சுட்டு பந்த எடுக்க வரப்ப ஒரே தாண்டுல தண்டி
வேப்பமரம் பக்கத்துல போனான்.

மரத்துக்கு பக்கத்துல போய்ட்டு "அண்ணே!.. போலீஸ் அண்ணே உன்னதான் அந்த பந்த எடுத்து போடுணே" அப்படினு மரத்துக்கு அடில இவங்க விளையாட்டை வேடிக்க பாத்துட்டு இருந்த கதிர்வேலனை கேட்டான். கதிர்வேலனும் பக்கத்துல கிடந்த பந்த எடுத்து சிரிச்சுட்டே அந்த பயகிட்ட வீசினான். அந்த பயலும் பந்த புடிச்சுட்டு திரும்ப விளையாட போய்ட்டான்.

கதிர்வேலனுக்கு ஒரு 27 வயசு இருக்கும். 6 அடி உசரம் இருப்பான். விரிஞ்ச நெஞ்சும் நல்லா இறுகிப்போன காலும் கையும்> அளவான தசை கொண்ட உடம்பு> ட்ரிம் செய்யப்பட்ட தாடி> மீசைன்னு ஊர்ல இருக்குற இளவட்டங்களிலே இவன் மட்டும் தனியா தெரிவான்.

இதுக்கு கரணம் இது மட்டும் இல்ல அந்த ஊர்லயே இவன் வயசு பயலுகளுள இவன் மட்டும்தான் கவர்ன்மென்ட் வேலையில அதுவும் போலீஸ் ல சப் இன்ஸ்பெக்ட்ர் ஆ இருப்பதும்தான். இதுனாலே ஊர்ல இவனுக்கு தனி மரியாதைதான்.

ஆனா என்னதான் போலீஸ்காரான இருந்தாலும் எப்போவுமே அமைதியா எல்லோருகிட்டையும் சகஜமாதான் பழகுவான். இவனோட இந்த குணத்தால பழகுற எல்லோரையும் காந்தமாதிரி தன்பக்கம் இழுத்துப்பன்.
என்னனு தெரில என்னைக்கும் இல்லாம அன்னைக்குனு......

எழுதியவர் : பூபாலன் மு (28-Jan-22, 8:28 pm)
சேர்த்தது : பூபாலன் மு
பார்வை : 256

மேலே