கனவு தேவதையே 555
***கனவு தேவதையே ***
காதல் தேவதை...
அருவியில்
ஆர்ப்பரிக்கும் தண்ணீரை...
கைகள்
நீட்டி ரசிக்கிறாய்...
தண்ணீரை ரசிக்கும் நீயே
என் கனவு கன்னியென ரசிக்கிறேன்...
கரையில் நின்று நான்...
தாவணி
உடுத்தும் நாட்களில்...
நீ கூந்தல் ஒதுக்கி பூச்சூட
நேரம் எடுத்து கொள்கிறாய்...
என்னை உன்
மனதில் சூடிக்கொள்ள...
என்னை எப்போதாவது
திரும்பி பார்க்கும்...
நேரமாவது எடுத்துக்கொள்வாயா...
புல்லாங்குழலின் காதில்...
உன் உதடுகளை வைத்து
மென்மையாக ஊதுகிறாய்...
நானும் உன் காதருகே...
என் உதட்டை வைத்து
மென்மையாக ஊதவேண்டும்...
என் காதலை உன் காதில்...
என்
கனவு கன்னியே.....
***முதல் பூ .பெ .மணி.....***