விண்டவர் கண்டிலர்கண்டவர் விண்டிலர்
விண்டவர் கண்டிலர்.......
கண்டவர் விண்டிலர்.....!
வாழ்க்கை....
வானிலிருந்து வந்தது
வானுக்கே திரும்புது.
மண்ணில் பிறந்து வாழ்ந்தது
மண்ணிலேயே புதைந்தது.
நீரிலிருந்து தோன்றியது
நீரிலேயே கரைந்தது.
தீயிலிருந்து விளைந்தது
தீயிலேயே கருகியது.
காற்றிலெங்கும் நிறைந்தது
காற்றோடு மறைந்தது.
பஞ்சபூதங்களின் ஆளுமை
பாவி நமக்குள்ளும் நடக்குது.
வஞ்சம் சூழ் இவ்வுலகில்
ஆட்டங்கள் முடிந்தவுடன்
தஞ்சம் அடைந்தன
அதனதன் உட்கருவுக்குள்.
எங்கிருந்து வந்ததோ
அங்கேயே போய்ச் சேர்ந்துவிடும்
இவ்வாழ்க்கை சூட்ச்சுமத்தை கண்டவர் விண்டிலர்...விண்டவர் கண்டிலர்...