கால் தடத்தை பதித்து போ

கால்தடத்தை பதித்து போ....!

ஈர்க்கும் இவ்வுலக மாயவளைக்குள்
ஈயென மொய்த்துச் சாகும்
இளைய சமுதாயமே...!
பொய்யை மெய்யாய் நம்பி
வாய்சவடாலால் வாழ்க்கையை
நசித்துக்கொள்ளும்,
நாளும் உடற்சுகம் நாடும் - அதற்காய்
பாழும் பல வழிகள் தேடும்
இளைய சமுதாயமே....!
வாழும் வாழ்க்கை ஒரு முறைதான்
புரிந்துகொள்.
பாழும் கிணற்றைத் தேடிச்சரணடையும்
திறமைகள் அனைத்தையும் வீணடித்து
வீண் பழிகளை நாடிச்சுவைக்கும்
பின் விளைவுகளை சற்றும் எண்ணாமல்
எண்ணப்படி வாழ்வதுதான் சுதந்தரமென
கட்டுகள் தளர்ந்த காட்டாற்று வெள்ளமென
பாய்ந்து வீணாய்போகும்
இளைய சமுதாயமே....!
சொல்வதை சற்று கேள் - நின்று
நிதானமாய் யோசித்துப் பார்.
நீ செய்வது...அதனால் விளைவது
முழுதும் எண்ணிப்பார்.
புரிந்து கொள் - பின் செயல்படு.
உணர்ச்சியோடு முடிவெடுக்காதே - உன்
அறிவையும் கொஞ்சம் உபயோகி.
ஆனால்
உன் அறிவிவைத் தடம் புரட்டத்தான்
இத்தனை மாயைகள்...
இத்தனை ஈர்ப்புகள்..
வாலிபத்தில் சுரக்கும் ஹார்மோன்கள்...
பயிச்சி செய்...முயற்சி செய்..
வெற்றி நிச்சயம்.
கால் தடத்தை பதித்து போ.
காயங்களையும்
ஆறாத வடுக்களையும்
விட்டுப் போகாதே.

எழுதியவர் : ஜீவன் (மகேந்திரன்) (1-Feb-22, 6:40 pm)
சேர்த்தது : ஜீவன்
பார்வை : 83

மேலே