வெற்றுத்தாளாய் நான்
வெற்றுத்தாளாய் நான்...!
வெற்றுத்தாளாய் இருந்த என்னில்
சில நேரம்... பூங்கவிதையாய் பூக்கும்.
சில நேரம் ...பூகம்பமாய் வெடிக்கும்.
சில நேரம்...குழப்பமாய் கிறுக்கும்.
சில நேரம்...தத்துவங்களை உதிர்க்கும்.
பல நேரம்...தர்க்கங்களாய் வாதிடும் - உயர்நோக்கோடு
சில நேரம் பதிகங்கள் பாடும் - உயிரிழந்து
பல நேரம் குப்பைக்குள் முடங்கும்.
எழுதி...எழுதி...
அழித்து...அழித்து...
திரும்பத் திரும்ப
எழுதி...எழுதி...
அழித்து...அழித்து...
இற்றுப்போன
வெற்றுத்தாளாய் நான்.