கள்ளி - நொச்சில் - இவற்றின் பட்டை - நேரிசை வெண்பா

கள்ளி - நொச்சில் - இவற்றின் பட்டை
நேரிசை வெண்பா

நரம்புச் சிலந்தி நளிர்வாத சன்னி
உரம்பெரிய வாதமிவை யோடும் - பெரும்புவியிற்
கள்ளிமரப் பட்டையினாற் காரநொச்சிற் பட்டையது
துள்ளுசந்நி வாதமகற் றும்

- பதார்த்த குண சிந்தாமணி

கள்ளிமரப் பட்டை, நரம்புச் சிலந்தி, கபநோய், வாதம், சன்னி, ஆகியவற்றைப் போக்கும்; நொச்சில் மரப்பட்டை சன்னியால் பிறந்த வாதத்தைப் போக்கும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (5-Feb-22, 7:24 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 16

மேலே