முசுமுசுக்கை வேர் - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
கந்தம் பரவு களிச்சளியும் புன்விடமும்
மந்தம் பெறுவிடமும் வாந்திகளும் - அந்தம்
பெருகுரங்குக் கிச்சூடும் பித்தமுமி ருக்கா
திருகுரங்குக் கைவேருக் கே
- பதார்த்த குண சிந்தாமணி
இறுக்கம் பெற்ற கோழை, அற்ப வீரிய விடம், வாந்தி, மந்தம், மார்பு நோய், குன்மம், பித்தம் இவற்றை முசுமுசுக்கை நீக்கும்