பொன் மொழிகள் தொகுப்பு
சில பொன் மொழிகள்
• தவறு செய்தல் மனித குணம், மன்னித்தல் தேவகுணம். - போப்
• உலகிலேயே பெரிய சுமை மூடநம்பிக்கையே. - மல்டன்
• அளவு கடந்த ஆசை, அளவற்ற துவேசமாக மாறுகிறது. -சாக்ரடீஸ்
• மனசாட்சி செய்யும் சித்திரவதையே ஆன்மாவின் நரகம். - கார்லைல்
• வாழ்நாளைப் பெருக்க உணவைச் சுருக்கு. -பெஞ்சமின்
• இதயக்குமுறலை மூழ்கடிக்கும் கலை இதமான சிரிப்பு. -ஹார்ட்லி
• சந்தேகத் திரையை கேள்விகளால் கிழித்தெறிய வேண்டும். -காப்பர்
• சிரமப்பட்டுப் பெறுவதே நீண்ட காலம் நீடித்து நிற்கும் -சார்லஸ் கேப்டன்.
• மகத்தான காரியங்களைச் செய். நீண்டகாலம் அது பற்றி கனவு காணாதே. -சார்லஸ் கிங்ஸ்லி
• வேலையும் ஓய்வும் மருத்துவர் கதவை மூடுகிறது. -புல்லெர்
• தொல்லைகளை எளிதாக்குகிறது பொறுமை. -தாம்சன்.
• கவிஞர்கள் கஷ்டத்தில் கற்றதைக் கவிதையில் போதிக்கிறார்கள். -ஷெல்லி
• செல்வத்தை உண்டாக்காமல் நுகர உரிமை கிடையாது. -பெர்னாட்ஷா
• உடல்நலமே எல்லா உரிமைகளிலும் மேலானது. -அமியல்
• உன்னால் முடிந்தவரை உன் பணியினை இனி நன்றாய் செய். -நியூட்டன்
• நாணயத்தை இழந்தவன் இழப்பதற்கு வேறொன்றும் இல்லாதவன். -விலி
• செயல் புரிபவர் அனைவரும் சிந்திப்பவர்களின் அடிமையே. -ஹின்
• துன்பத்தை அனுபவித்தால் அறிவு வளரும். -ப்ரவுனிங்
• ஒற்றுமையின் விளக்கமாகி விடுங்கள். அன்பின் நாக்காகி விடுங்கள். -லாங்பெல்லோ
• குழந்தைப் பருவம் பகுத்தறிவின் உறக்க நிலை. -ரூஷோ
• ஆழ்ந்த சிந்தனைக்கு அதிக பலன் உண்டு. -ஆல்பர்ட்
• ஒரு பிழையை நீ திருத்த மறுக்கும் போதுதான் அது தவறாகிறது. -ஆர்லாண்டோ
• கூலி கொடுப்பவனை ஊனமாக்கி கூலி வாங்குபவனுக்கு உதவமுடியாது. -லிங்கன்
• கனவின் லட்சியம் மனிதனின் விருப்பங்களைப் பூர்த்தி செய்து வைப்பதுதான். -ப்ராய்டு.
• பல அறிஞர்களுடன் உறவாடினால் நீயும் அறிஞனாகிறாய். -எபிக்டெட்ஸ்
• இளமை என்னும் பக்குவமான வயதில்தான் எவ்வித பண்பும் உருப்பெறுகிறது. -இங்கர்சால்
• பொதுப்பணியில் நாணயமும் நேர்மையும் வேண்டும். -நேரு
• கண்ணால் காணப்படும் உலகம் வேறு. அறிவால் உணரப்படும் உலகம் வேறு. -பிளாட்டோ
• நம்பிக்கை என்பது கண் விழித்திருக்கும் போதே காணும் கனவு. -பிளினி
• எவ்வித தியாகமும் செய்யாமல் எவ்வித நன்மையும் பெறமுடியாது. -ஹெல்ப்ஸ்