பாரதியார்

பாரதியார்.
----------

பாட்டுக்குள் வேள்வித்தீ
பரப்பி வைத்தவன்/
கூட்டுக்குள் சிக்காதுக் கூவித் திரிந்தவன்

எப்போதும் கொதிக்கின்ற எழுத்தினில் வாழ்பவன் /
முப்போதும் முழங்குகின்ற தமிழினக் காவலன் !

கண்ணனையேக் காதலனாய் வரித்துக் கொண்டவன் /
கானக்குயில் பாடலிலே கீதம் கண்டவன்!

பாப்பாவிற்குப் பாடினாலும் வீரம் மிக்கவன்
பாப்புலவர் யாவருக்கும் பாதை வகுத்தவன் !

பாரதிரும் பாரதியின் விடுதலைப் பாட்டால் /
பறங்கியரின் சிற்றிதயம் பதைத்திடும் கேட்டால்!

-யாதுமறியான்.

எழுதியவர் : யாதுமறியான் (5-Feb-22, 2:31 pm)
சேர்த்தது : யாதுமறியான்
பார்வை : 289

மேலே